Published:Updated:

அமைச்சரை முற்றுகையிட்ட மீனவர்கள்; தீக்குளிக்க முயன்ற பெண் - களேபரத்தில் முடிந்த நலத்திட்ட உதவி விழா!

அமைச்சரை முற்றுகையிட்ட மீனவர்கள்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற, நலத்திட்டஉதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மீன்வளத்துறை அமைச்சரை மீனவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அமைச்சரை முற்றுகையிட்ட மீனவர்கள்; தீக்குளிக்க முயன்ற பெண் - களேபரத்தில் முடிந்த நலத்திட்ட உதவி விழா!

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற, நலத்திட்டஉதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மீன்வளத்துறை அமைச்சரை மீனவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Published:Updated:
அமைச்சரை முற்றுகையிட்ட மீனவர்கள்

ராமநாதபுரம் மீன்வளத்துறை சார்பில் இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்டு, பயன்படுத்த முடியாமல் சேதமடைந்த மீன்பிடி படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்குதல் மற்றும் படகில் வெளிப்பொருத்தும் இயந்திரம் வழங்கல் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. பழைய ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மீனவர் நலன் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன், ஆட்சியர் சங்கர்லால் குமாவத், காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்ட அரங்கை அமைச்சர், எம்.எல்.ஏ-க்கள், ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் நெருங்கிய நிலையில், அங்கு காத்திருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர் குட்வின் என்பவரின் மனைவி, குழந்தையுடன் அமைச்சரை வழிமறித்து இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட மீனவர்களுக்கான நலத்திட்ட உதவிப்பட்டியலில் தன்பெயர் இடம் பெற்ற நிலையில், திடீரென தான் உட்பட 4 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டதாக புகார் கூறினார்.

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்

அந்தப் பெண்ணிடம் நீக்கப்பட்ட பெயர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார். இருந்தும் அந்தப் பெண், `எங்கள் பெயர்களை உடனடியாக இணைத்து எங்களுக்கும் நிவாரண நிதி வழங்க வேண்டும்!' என்று மீண்டும் அமைச்சரை வலியுறுத்தினார். அப்போது அவருடன் இருந்த மீனவர் ஒருவர், `எங்களுக்கு பெயர்களை சேர்த்து நிவாரண நிதி வழங்காவிட்டால்.. இங்கேயே தீக்குளிப்போம்' என்று கூச்சலிட்டார். இதனால, அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதையடுத்து அமைச்சர் அவர்களிடம், `தமிழக முதல்வரின் கவனத்துக்கு இந்த பிரச்னை கொண்டு செல்லப்படும்' எனக்கூறி விட்டு மேடைக்குச் சென்று தனது இருக்கையில் அமர்ந்து கொண்டார். இதையடுத்து கூச்சலிட்ட மீனவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியும், அவர்கள் கேட்கவில்லை, இதனால் விழா நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், `கண்டிப்பாக உங்களுக்கு ஒருமாதத்திற்குள் நிவாரணம் பெற்றுதருகிறோம். இல்லையென்றால் எனது சொந்த பணத்தை நிவாரணமாக தருகிறேன்' என்றார். அதையடுத்து மீனவர்கள் அங்கிருந்து சென்றனர். அமைச்சரை மீனவர்கள் முற்றுகையிட்டதை அடுத்து அங்கு கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பின்னர் நடைபெற்ற விழாவில் இலங்கையில் பிடிபட்டு பழுதடைந்த படகுகளின் உரிமையாளர்கள் 57 பேருக்கு தலா ரூ.5 லட்சத்துக்கான காசோலைகள், மீனவர்களுக்கான மானியத்துடன் கூடிய வெளிப்பொருத்தும் இயந்திரங்கள் 15 பேருக்கும், சேதமடைந்த மீன்பிடி படகுகளுக்கு பேரிடர் மேலாண்மை நிதியுதவி 2 பேருக்கும் என 84 பயனாளிகளுக்கு ரூ.2.78 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். மேலும் 10 பேருக்கு ஆழ்கடல் மீன்பிடி திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான சான்றுகளையும் வழங்கினார்.

அதனை தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர், ``உறவுக்குக் கை கொடுப்போம், மாநில உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்ற அடிப்படையிலேயே தமிழக முதல்வர் செயல்படுகிறார். சமீபத்தில் பிரதமர், உள்துறை மற்றும் நிதியமைச்சரை சந்தித்து தமிழக உரிமைகளையே வலியுறுத்தியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் தற்போது வறட்சி மாவட்டம் அல்ல. தண்டனைக்குரிய அதிகாரிகள் ராமநாதபுரம் மாற்றப்பட்ட காலம் போய், இங்கே பணிபுரிய அதிகாரிகளிடையே பெரும் போட்டி நிலவுகிறது. இலங்கை தற்போது பொருளாதார சிக்கலில் இருந்தாலும், `இன்னா செய்தாரை ஒறுத்தல்...' என்பதுபோல அங்குள்ள தமிழர் உள்ளிட்டோருக்கு உதவிட தமிழக முதல்வர் மத்திய அரசின் அனுமதியைக் கோரியுள்ளார்.

முற்றுகையிட்ட மீனவர்கள்
முற்றுகையிட்ட மீனவர்கள்

தமிழக மீனவர்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டால் உடனடியாக பிரதமர், உள்துறை அமைச்சருடன் பேசி அவர்கள் விடுவிக்கப்பட முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டுவருகிறார். மீனவர்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை வழங்கும் முதல்வர், விவசாயிகளுக்கு வேளாண்மைக் கூட்டுறவு வங்கி இருப்பது போல மீனவர் கூட்டுறவு வங்கி ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்வார். ஆழ்கடல் மீன்பிடி திட்டத்தில் அரசிடம் நிதியுதவி எதிர்பார்க்கும் நிலையில், அதை நிறைவேற்ற முதல்வரிடம் பேசப்படும். மீனவர்களுக்கு டீசல் மானிய உயர்வு, பெரிய அளவில் மீன்வளர்ப்போருக்கு மின்கட்டணசலுகை ஆகியவற்றுடன், இலங்கையில் உள்ள அனைத்துப் படகுகளையும் மீட்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்படும். ராமேஸ்வரத்தில் புதிய மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும்" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விழாவில் கலந்து கொண்ட மீனவர்கள்
விழாவில் கலந்து கொண்ட மீனவர்கள்

தொடர்ந்து பேசிய அவர், ``இங்கு தங்கள் பெயர் நிவாரணம் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்த மீனவர்களிடம் தமிழக முதல்வரின் கவனத்துக்கு இந்த பிரச்னை கொண்டு செல்லப்படும் என கூறியும், தொடர்ந்து கூச்சலிட்டால் என்ன செய்வது. ஒருமாதத்திற்குள் நிவாரணம் கிடைக்கவில்லை என்றால் நானும், எம்.எல்.ஏ காதர் பாட்ஷாவும் எங்கள் சொந்த பணத்தைத் தருகிறோம்" என்றார்.

பின்னர் விழா முடிந்து வெளியே வந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அங்கிருந்த பெயர்விடுபட்ட மீனவர்கள் அருளானந்தம், குட்வின், சேந்தி, அடைக்கலம் ஆகியோரை சந்தித்துப் பேசினார். அப்போது அடைக்கலத்தின் மனைவி ஜெசிந்தா, தான் கைப்பையில் மறைத்து கேனில் கொண்டுவந்த மண்ணெண்ணெய்யை எடுத்து தீக்குளிக்கப் போவதாகக் கூறி கேனை திறந்து தன்மேல் ஊற்ற முயன்றார். அதையடுத்து, போலீஸார் அவரிமிருந்து மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism