Published:Updated:

"ராகுல் காந்தியுடையது வெளிநாட்டு டிஎன்ஏ; அதனால்தான் சொந்த நாட்டை ஏமாற்றுகிறார்" - பாஜக எம்.பி தாக்கு

பாஜக எம்.பி ஹர்நாத் சிங் யாதவ்

``ராகுல் காந்தியுடையது வெளிநாட்டு டிஎன்ஏ. அதனால்தான் சீனாவுடன் கூட்டு சேர்ந்து தனது சொந்த நாட்டையே ஏமாற்றுகிறார்." - பாஜக எம்.பி ஹர்நாத் சிங் யாதவ்

"ராகுல் காந்தியுடையது வெளிநாட்டு டிஎன்ஏ; அதனால்தான் சொந்த நாட்டை ஏமாற்றுகிறார்" - பாஜக எம்.பி தாக்கு

``ராகுல் காந்தியுடையது வெளிநாட்டு டிஎன்ஏ. அதனால்தான் சீனாவுடன் கூட்டு சேர்ந்து தனது சொந்த நாட்டையே ஏமாற்றுகிறார்." - பாஜக எம்.பி ஹர்நாத் சிங் யாதவ்

Published:Updated:
பாஜக எம்.பி ஹர்நாத் சிங் யாதவ்

டிசம்பர் 9-ம் தேதியன்று இந்திய-சீன ராணுவப் படைகளுக்கு இடையே நடந்த மோதல் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பலவும் பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசை விமர்சித்து வருகின்றன. இதில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, சீனா போருக்குத் தயாராகிவருவதாகவும், இந்திய அரசு தூங்கிக்கொண்டிருப்பதாகவும் மத்திய அரசை விமர்சித்திருந்தார்.

இந்தியா - சீனா
இந்தியா - சீனா
Aleksandar Mijatovic

மேலும் இந்த விவகாரத்தில், மல்லிகார்ஜுன கார்கே, அரவிந்த் கெஜ்ரிவால், சஞ்சய் சிங் ஆகியோர் மத்திய அரசுக்கெதிராக கருத்து தெரிவித்தனர். ஆனால், அதற்கெல்லாம் பதில் தரும் விதமாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ``அரசின் செயல்பாடுகளை அரசியல்ரீதியாக விமர்சிப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், அருணாச்சலப் பிரதேசத்தில் நிலைத்து நின்ற ராணுவ வீரர்களைப் பாராட்டிக் கவுரவிக்க வேண்டும்" என்று நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

பாஜக எம்.பி ஹர்நாத் சிங் யாதவ்
பாஜக எம்.பி ஹர்நாத் சிங் யாதவ்

இந்த நிலையில் உத்தரப்பிரதேச பா.ஜ.க எம்.பி ஹர்நாத் சிங் யாதவ், ``வெளிநாட்டவர் ஒருபோதும் தேசபக்தராக இருக்க முடியாது. ராகுல் காந்தியுடையது வெளிநாட்டு டிஎன்ஏ. அதனால்தான் சீனாவுடன் கூட்டு சேர்ந்து தனது சொந்த நாட்டையே ஏமாற்றுகிறார். ராணுவ பதற்றம் ஏற்படும்போதெல்லாம், ராணுவத்தை அவமானப்படுத்தவே அவர்கள் வேலை செய்கிறார்கள். மேலும், சீனா மற்றும் பாகிஸ்தானுடன் ராகுல் காந்தி முழுமையாக ஈடுபட்டிருக்கிறார்" என ராகுல் காந்தியை விமர்சித்திருக்கிறார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

முன்னதாக ராகுல் காந்தி, தேசபக்தி தன்னுடைய டிஎன்ஏ-விலேயே கலந்திருப்பதாகவும், அதை நிரூபிக்க ஆர்.எஸ்.எஸ் அல்லது பா.ஜ.க ஒன்றும் சான்று தரவேண்டியதில்லை என ஏற்கெனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.