Published:Updated:

கெஜ்ரிவாலுக்கு குடைச்சல் கொடுத்த முன்னாள் அமைச்சர்... பி.ஜே.பி-யில் இணைந்தார்!

ஆ.பழனியப்பன்

அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த கபில் மிஸ்ரா, பா.ஜ.க-வில் இணைந்தார்.

Kapil Mishra
Kapil Mishra

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்றுவருகிறது. இதில், அமைச்சராக இருந்தவர் கபில் மிஸ்ரா. இவர், 2015-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த பா.ஜ.க-வின் மோகன் சிங் பிஸ்டியைத் தோற்கடித்தார்.

arvind kejriwal
arvind kejriwal

சம்ஸ்கிருதத்தில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட கபில் மிஸ்ரா, நீர்வளத்துறை அமைச்சரானார். சரியாகப் பணியாற்றவில்லை என்று 2017 மே மாதம் அமைச்சரவையிலிருந்து அவரை நீக்கினார் அரவிந்த் கெஜ்ரிவால்.

அதன் பிறகு, அரவிந்த் கெஜ்ரிவால் மீது ஊழல் குற்றச்சாட்டைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியதுடன், ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார்.

aam aadmi
aam aadmi

ஆனால், அந்தக் குற்றச்சாட்டை அவரால் நிரூபிக்க முடியவில்லை. அரவிந்த் கெஜ்ரிவால் மீதான புகாரை லோக் ஆயுக்தா தள்ளுபடி செய்தது. ஆனாலும், கெஜ்ரிவால் மீது இவர் தொடர்ந்து ஊழல் புகார் சொல்லிவந்தார்.

Vikatan

அது மட்டுமல்ல, 2019 தேர்தலில் பா.ஜ.க மேடைகளில் ஏறி ஆம் ஆத்மிக்கு எதிராகவும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராகவும் பிரசாரம் செய்தார். அதையடுத்து, கட்சிவிரோத நடவடிக்கையின் அடிப்படையில் ஆம் ஆத்மியிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.

Kapil Mishra
Kapil Mishra

பா.ஜ.க-வுக்கு ஆதரவாகச் செயல்பட்டுவந்த அவர், இன்றைக்கு பா.ஜ.க-வில் இணைந்துவிட்டார். அவருடன் சேர்ந்து, ஆம் ஆத்மியின் மகளிர் அணித் தலைவர் ரிச்சா பாண்டேயும் பா.ஜ.க-வில் இணைந்தார்.