Published:Updated:

ஜெ.மரணம்: ``ஓபிஎஸ், சசிகலா குற்றவாளிகள்... ஆறுமுகசாமி அறிக்கையின் அடிப்படையே அதுதான்!" - ஜெயக்குமார்

ஜெயக்குமார் - முன்னாள் அமைச்சர்

``ஆறுமுகசாமி விசாரணை அறிக்கையின் கடைசியில் இடம்பெற்றிருந்த திருக்குறளைப் பார்த்து தமிழ்நாடே கண்ணீர் சிந்தக்கூடிய நிலைதான் இருக்கிறது.’’ - ஜெயக்குமார்

ஜெ.மரணம்: ``ஓபிஎஸ், சசிகலா குற்றவாளிகள்... ஆறுமுகசாமி அறிக்கையின் அடிப்படையே அதுதான்!" - ஜெயக்குமார்

``ஆறுமுகசாமி விசாரணை அறிக்கையின் கடைசியில் இடம்பெற்றிருந்த திருக்குறளைப் பார்த்து தமிழ்நாடே கண்ணீர் சிந்தக்கூடிய நிலைதான் இருக்கிறது.’’ - ஜெயக்குமார்

Published:Updated:
ஜெயக்குமார் - முன்னாள் அமைச்சர்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``ஆந்திராவில் தமிழக மாணவர்கள்மீது நடந்த தாக்குதல் குறித்து கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும். ஆனால் முதலமைச்சர் இதுவரை வாய் திறக்கவில்லை. தனியார் ஊடகத்தில் பணிபுரிந்த செய்தியாளர் இறப்புக்கு ரூ.5 லட்சம் வழங்கியது போதாது. உயிரிழந்த செய்தியாளர் வாழ்நாள் முழுவதும் எவ்வளவு சம்பளம் வாங்குவாரோ, அதை அரசு வழங்க வேண்டும். இல்லையென்றால் அவரது குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

சசிகலா, ஓ.பி.எஸ்
சசிகலா, ஓ.பி.எஸ்

அ.தி.மு.க., இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. நீதியரசர் ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை தொடர்பாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்திருக்கிறார்.

அன்றைய காலகட்டத்தில் முதல்வராக இருந்த ஓ.பி.எஸ்-ஸுக்குத்தான் அனைத்து முதல்வரின் அதிகாரங்களும் வழங்கப்பட்டன. சசிகலா ,ஓ.பி.எஸ் இருவரும் குற்றம் செய்தவர்கள் என்ற அடிப்படையில்தான் விசாரணை அறிக்கையின் முடிவே இருக்கிறது. இதைக் கருத்தில்கொண்டு தமிழ்நாடு அரசு முடிவு எடுப்பதுதான் சரியான தீர்வாக இருக்க முடியும். ஆறுமுகசாமி விசாரணை அறிக்கையின் கடைசியில் இடம்பெற்றிருந்த திருக்குறளைப் பார்த்து தமிழ்நாடே கண்ணீர் சிந்தக்கூடிய நிலைதான் இருக்கிறது’’ என்றார்.