Published:Updated:

அதிமுக: `` `துரோகம்' ஓபிஎஸ் உடன்பிறந்தது... பொதுக்குழுவில் விடை கிடைக்கும்!" - ஜெயக்குமார் காட்டம்

ஜெயக்குமார்

``ஓ.பி.எஸ் அடிப்படை விதிகளே தெரியாமல் இருக்கிறார். இன்றைய கூட்டத்தில் பல முடிவுகள் எடுக்கப்பட்டன. அவை அனைத்தையும் வெளிப்படையாகக் கூற முடியாது." - ஜெயக்குமார்

அதிமுக: `` `துரோகம்' ஓபிஎஸ் உடன்பிறந்தது... பொதுக்குழுவில் விடை கிடைக்கும்!" - ஜெயக்குமார் காட்டம்

``ஓ.பி.எஸ் அடிப்படை விதிகளே தெரியாமல் இருக்கிறார். இன்றைய கூட்டத்தில் பல முடிவுகள் எடுக்கப்பட்டன. அவை அனைத்தையும் வெளிப்படையாகக் கூற முடியாது." - ஜெயக்குமார்

Published:Updated:
ஜெயக்குமார்

அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை பிரச்னை கடந்த இரு வாரங்களாக நீடித்துவருகிறது. ஓ.பி.எஸ்-ஸின் ஆதரவாளர்கள் ஒரு பக்கமும், இ.பி.எஸ்-சின் ஆதரவாளர்கள் மறு பக்கமும் ஆலோசனைக் கூட்டங்களை நடத்திவருகின்றனர்.

``ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியாகிவிட்டது. ஓ.பன்னீர்செல்வம் தற்போது அ.தி.மு.க-வின் பொருளாளர் மட்டுமே" என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தது அ.தி.மு.க-வில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஒற்றைத் தலைமை விவகாரம் கட்சிக்குள் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

கூட்டம் முடிந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இது தொடர்பாக செய்தியாளர்களிடத்தில் பேசினார். `` சென்னை அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் 74 தலைமைக் கழக நிர்வாகிகளில் 65 பேர் கலந்துகொண்டனர். பண்ருட்டி ராமச்சந்திரன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கூட்டத்துக்கு வர முடியாது என்று கடிதம் அளித்திருக்கிறார்கள். வரும் 11-ம் தேதி நடைபெறவிருக்கும் அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பிதழ் அனுப்புவது குறித்து கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் கிழிக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பேனரை மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆனதால், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இன்றைய கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை நடத்த தலைமை நிலையச் செயலாளருக்கு உரிமை இருக்கிறது. ஓ.பி.எஸ் அடிப்படை விதிகளே தெரியாமல் இருக்கிறார். இன்றைய கூட்டத்தில் பல முடிவுகள் எடுக்கப்பட்டன. அவை அனைத்தையும் வெளிப்படையாகக் கூற முடியாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதிமுக
அதிமுக

ஓ.பி.எஸ் அ.தி.மு.க-வுக்குப் பல துரோகங்களைச் செய்திருக்கிறார். துரோகத்தின் அடையாளம் ஓ.பி.எஸ். துரோகம் என்பது அவருடைய உடன்பிறந்த ஒன்று. ஓ.பி.எஸ் பொருளாளர் பதவியில் நீடிப்பாரா, நீடிக்க மாட்டாரா என்பதற்கு பொதுக்குழுவில்தான் விடை கிடைக்கும். துரோகத்தின் அடையாளமான ஓ.பி.எஸ்-ஸை `நமது அம்மா' நாளிதழ் நிறுவனராக எப்படி வைத்துக்கொள்ள முடியும்?

ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் முதல்வரைச் சந்தித்து அர்ப்பணிப்பு உணர்வுடன் நடந்ததை மறக்க முடியுமா... அ.தி.மு.க தொண்டர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா... இது மாதிரி நிறைய உதாரணங்களைக் கூற முடியும். தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் துரோகம் இழைத்த கட்சி தி.மு.க. முல்லைப்பெரியாறு, முள்ளிவாய்க்கால் படுகொலை, காவிரி நதிநீர்ப் பிரச்னை, ஈழப்படுகொலை ஆகியவற்றில் துரோகம் செய்திருக்கிறது. துரோகத்தின் மொத்த உருவமே தி.மு.க-தான்'' என்றார்.