Published:Updated:

``ஓபிஎஸ்-ஸுக்கும் அதிமுக-வுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை!'' - ஜெயக்குமார் திட்டவட்டம்

ஜெயக்குமார் - முன்னாள் அமைச்சர்

``ஓபிஎஸ்-ஸுக்கும் அதிமுக-வுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அதிமுக அலுவலகத்திலிருந்து ஓபிஎஸ்-ன் படத்தை நீக்கியது சரிதான்." - ஜெயக்குமார்

``ஓபிஎஸ்-ஸுக்கும் அதிமுக-வுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை!'' - ஜெயக்குமார் திட்டவட்டம்

``ஓபிஎஸ்-ஸுக்கும் அதிமுக-வுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அதிமுக அலுவலகத்திலிருந்து ஓபிஎஸ்-ன் படத்தை நீக்கியது சரிதான்." - ஜெயக்குமார்

Published:Updated:
ஜெயக்குமார் - முன்னாள் அமைச்சர்

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``பேரறிஞர் அண்ணா அரசியலில் நாகரிகத்தை கடைப்பிடித்தவர். ஓபிஎஸ்-ஸுக்கும் அதிமுக-வுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அதிமுக அலுவலகத்திலிருந்து ஓபிஎஸ்-ன் படத்தை நீக்கியது சரிதான்.

சசிகலாவுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். அவர் சிரிக்காமல் நகைச்சுவை செய்வார். ஜெயலலிதா போன்று தன்னை மக்கள் பார்ப்பதாக சசிகலா கூறியதை பற்றி நீங்கள் கேட்கிறீர்கள். மலைக்கும், மடுவுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. மழை என்பது அம்மா. மடு யார் என்று உங்களுக்கே தெரியும்.

ஓபிஎஸ் - அதிமுக
ஓபிஎஸ் - அதிமுக

திமுக-விடம் உருப்படியான திட்டம் கிடையாது. நரிக்குறவர் இன மக்களை பழங்குடியினர் பட்டியில் சேர்க்க முதன்முதலில் குரல் கொடுத்தவர் ஜெயலலிதா. விளம்பரத்துக்காக மட்டுமே சிற்றுண்டி போன்ற திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

திமுக அரசை பொறுத்தவரை இரண்டு நபர்கள் விளம்பரத்தில் கெட்டிக்காரர்கள். ஒன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மற்றொருவர் தினமும் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுக்கின்ற சுகாதாரதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். இங்கு விளம்பர அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் சரியாக மருந்து மாத்திரைகள் கிடைக்காத நிலை நிலவிக் கொண்டிருக்கிறது'' என்றார்.