Published:Updated:

அதிமுக: ``ஓபிஎஸ் உலக கோடீஸ்வரர் வரிசையில் இருக்கிறார்!'' - ஜெயக்குமார்

ஜெயக்குமார் - முன்னாள் அமைச்சர்

``ஓ.பி.எஸ் உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்பவர். கட்சியைக்கூட காட்டிக்கொடுக்கத் தயங்காதவர்.'' - ஜெயக்குமார்

அதிமுக: ``ஓபிஎஸ் உலக கோடீஸ்வரர் வரிசையில் இருக்கிறார்!'' - ஜெயக்குமார்

``ஓ.பி.எஸ் உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்பவர். கட்சியைக்கூட காட்டிக்கொடுக்கத் தயங்காதவர்.'' - ஜெயக்குமார்

Published:Updated:
ஜெயக்குமார் - முன்னாள் அமைச்சர்

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை ராயபுரத்தில் விநாயகர் கோயில் ஒன்றில் அன்னதான நிகழ்வைத் தொடங்கிவைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``உலக கோடீஸ்வரர் வரிசையில் ஓ.பி.எஸ் இருக்கிறார். அந்த அளவுக்கு அவர் பண பலம் படைத்தவராக இருக்கிறார்.

சத்தியம் தவறாத உத்தமன்போலவே நடிக்கிறார். ஆனால், அந்த உத்தமனை மக்கள் நம்பத் தயாராக இல்லை. வாயெல்லாம் பொய். பொய்யிலே பிறந்த புலவரைப்போல பொய்யிலே பிறந்தவர் ஓ.பி.எஸ். அவர் வசூல்ராஜா ஓ.பி.எஸ். அவர் கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரரைப்போல மக்களை நம்பவைக்கிறார். ஆனால் மக்கள் அதை நம்பத் தயாராக இல்லை .

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

அ.தி.மு.க ஆட்சியில் எந்தத் துறையிலும் ஊழல் குற்றச்சாட்டு வராத நிலையில், ஓ.பி.எஸ் வகித்த துறையில் மட்டுமே ஊழல் புகார் வந்தது ஏன்... தொண்டர்கள், நிர்வாகிகளின் செல்வாக்கு ஓ.பி.எஸ்-ஸுக்குக் கிடையாது. ஊடகங்களையும், தி.மு.க-வையும் நம்பி அரசியல் செய்கிறார். ஓ.பி.எஸ் துரோகம் செய்வதில் கைதேர்ந்தவர்.

ஓ.பி.எஸ் உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்பவர். கட்சியைக்கூட காட்டிக்கொடுக்கத் தயங்காதவர். அ.தி.மு.க ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீராகப் பராமரிக்கப்பட்டது. தற்போது தி.மு.க ஆட்சியில் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. பொதுமக்களுக்கு பாதுகாப்பு கிடையாது'' என்றார்.