Published:Updated:

ஆவின்: ``தினந்தோறும் ஐந்தரை லட்சம் லிட்டர் பாலை நாசர் என்ற பூனைக்குட்டி குடிக்கிறது!" - ஜெயக்குமார்

ஜெயக்குமார்

ஆவின் ஊழல் வழக்கில் தனி நீதிபதி அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் விற்பனையாகும் ஆவின் பால் பாக்கெட்டுகளில் எடை குறைந்து விற்பனை செய்யப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ``தமிழ்நாடு முழுவதும் ஒரு நாளைக்கு 37 லட்சம் லிட்டர் பால் விற்பனையாகிறது. அதில் தினந்தோறும் ஐந்தரை லட்சம் லிட்டரை நாசர் என்ற பூனைக்குட்டி குடித்துவிடுகிறது. ஒரு நாளைக்கு அந்த பூனைக்குட்டி குடிக்கும் பாலின் விலை ரூ. 2.40 கோடி ஆகும்.

அமைச்சர் நாசர்
அமைச்சர் நாசர்

பொதுமக்களுக்கு வழங்கும் ஆவின் பாலில்கூட தி.மு.க விஞ்ஞான முறையில் ஊழல் நடத்தியிருக்கிறது. பொது மக்களுக்கு கிடைக்கக்கூடிய பாலை குறைத்து அதன் மூலம் ஆதாயம் தேடியவர்கள் தி.மு.க-வினர். ஆவின் ஊழல் வழக்கில் தனி நீதிபதி அமைத்து விசாரணை நடத்த வேண்டும். இந்த விவகாரத்தில் தி.மு.க துறை ரீதியான விசாரணை நடத்துவது என்பது மக்களை ஏமாற்றும் செயல், எந்த வகையிலும் நியாயம் கிடைக்காது'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!