Published:Updated:

``கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் செய்யலாம்” - தமிழிசையைச் சாடிய நாராயணசாமி

நாராயணசாமி - தமிழிசை

``தமிழிசை தெலங்கானாவுக்குத்தான் கவர்னர். அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அவரை உதாசீனப்படுத்துகின்றனர். அதனால்தான் புதுவையிலேயே அதிக நாள்கள் தங்கியிருக்கிறார்.” – முன்னாள் முதல்வர் நாராயணசாமி

``கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் செய்யலாம்” - தமிழிசையைச் சாடிய நாராயணசாமி

``தமிழிசை தெலங்கானாவுக்குத்தான் கவர்னர். அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அவரை உதாசீனப்படுத்துகின்றனர். அதனால்தான் புதுவையிலேயே அதிக நாள்கள் தங்கியிருக்கிறார்.” – முன்னாள் முதல்வர் நாராயணசாமி

Published:Updated:
நாராயணசாமி - தமிழிசை

புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் பாதயாத்திரையைச் சகித்துக்கொள்ள முடியாமல் அவர் அணிந்திருந்த டி-ஷர்ட் பற்றி பா.ஜ.க-வினர் விமர்சித்துள்ளனர். அது திருப்பூரில் தயாரிக்கப்பட்ட டி-ஷர்ட். பிரதமர் மோடி ஒரு நாளைக்கு மூன்று முறை உடையை மாற்றுகிறார். அவை இத்தாலி, ஜெர்மனி, அமெரிக்காவிலிருந்து வருகின்றன. உள்துறை அமைச்சர் அமித் ஷா அணியும் ஆடைகளும் வெளிநாட்டிலிருந்துதான் வருகின்றன. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதாகக் கூறிக்கொள்ளும் இவர்கள்தான், தேசியக்கொடியைக்கூட சீனாவிலிருந்து இறக்குமதி செய்தனர். அதனால் காங்கிரஸைக் குறைகூற பா.ஜ.க-வுக்கு எந்தத் தகுதியும் இல்லை.

நாராயணசாமி
நாராயணசாமி

நீண்ட நித்திரையில் இருந்தவர்கள் தேசத்தை ஒருங்கிணைக்க பாதயாத்திரை போவதாக ஏளனமாக பேசியிருக்கிறார் தமிழிசை. அவர் தெலங்கானாவுக்குத்தான் கவர்னர். அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அவரை உதாசீனப்படுத்துகின்றனர். அதனால்தான் புதுவையிலேயே அதிக நாள்கள் தங்கியிருக்கிறார். கவர்னர் பதவியில் உள்ளவர்கள் அரசியல் செய்யக் கூடாது. அவர் பாதயாத்திரையை விமர்சனம் செய்வதை ஏற்க முடியாது.  கவர்னர் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் மனநிலை மருத்துவரிடம் மருத்துவம் பார்க்க வேண்டும். அவர் அரசியல் செய்ய விரும்பினால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் செய்யலாம். உயர்ந்த பதவியில் இருந்துகொண்டு கீழ்த்தரமான அரசியல் செய்யக் கூடாது. பிரதமர் மோடி பிறந்தநாளை நிலத்தடிநீரைப் பாதுகாக்கும் வகையில் கொண்டாட அறிவுறுத்தியுள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால் புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி ஆட்சியின் முதலமைச்சரான ரங்கசாமி, அதிக அளவு தண்ணீரை உறிஞ்சும் ஆறு மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளார். அதில் ரூ.90 கோடி பணம் கைமாறியுள்ளது. அதை பா.ஜ.க எம்.எல்.ஏ-வே சட்டசபையில் விமர்சித்துள்ளார். அதனால் அந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ விசாரணை கோரியுள்ளோம். இந்த விஷயத்தில் பா.ஜ.க தலைவர்களின் பதில் என்ன... அதேபோல அந்த விவகாரம் குறித்து முதல்வர் ரங்கசாமியும் மக்கள் மத்தியில் பதில் சொல்ல வேண்டும். புதுவையில் பிரெஞ்சு குடியுரிமை மக்களின் சொத்துகள் அபகரிப்பு தொடர்பாக பிரான்சில் போராட்டம் நடத்தியுள்ளனர். இது இந்தியாவுக்கே பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. ரங்கசாமி பதவிக்கு வரும்போதெல்லாம் பிரெஞ்சு குடிமக்களின் சொத்துகள் அபகரிக்கப்படுகின்றன.

பல காவல் நிலையங்களில் அது குறித்து புகார் உள்ளது. ஆனால் ரங்கசாமி புகாரே இல்லை எனத் தவறான தகவல் அளிக்கிறார். அந்நாட்டு தூதரே நேரடியாகச் சட்டசபைக்கு வந்து ரங்கசாமியிடம் புகார் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்திருக்கிறது. புதுவையில் ரௌடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. முதலமைச்சர் ரங்கசாமியின் அலுவலகம் ரௌடிகளின் கூடாரமாக மாறியதுதான் அதற்குக் காரணம். முதலமைச்சர் அலுவலகத்திலேயே ரௌடிகள் இருந்தால் காவல்துறையினர் எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்... அதனால் ஒட்டுமொத்த நிர்வாகமும் ஸ்தம்பித்துப்போயிருக்கிறது. சொத்து அபகரிப்பு, ரெளடிகள் நடமாட்டம், வேலையின்மை, நிதிப் பற்றாக்குறை என அனைத்துக்கும் ரங்கசாமியே முழு பொறுப்பேற்க வேண்டும்” என்றார்.