குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவிருப்பதால், பல்வேறு அரசியல் மாற்றங்கள் நடந்து வருகின்றன.
இதையொட்டி, சமீபத்தில் குஜராத் மாநில காங்கிரஸின் செயல் தலைவராக இருந்த ஹர்திக் படேல், ``காங்கிரஸ் கட்சி தொடர்ந்து சமூகநலன்களுக்கு எதிராகச் செயல்பட்டுவருகிறது. காங்கிரஸ் தலைமைக்கு எந்த தொலைநோக்கு பார்வையும் இல்லை. காங்கிரஸ் சாதியப் பாகுபாடு நிறைந்த கட்சி'' என்று கூறி கட்சியிலிருந்து வெளியேறினார்.

இந்த நிலையில், இன்று குஜராத்தில் உள்ள பா.ஜ.க மாநில அலுவலகத்தில் மாநிலத் தலைவர் சி.ஆர்.பாட்டீல் முன்னிலையில் ஹர்திக் படேல் அந்தக் கட்சியில் இணைந்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``உலகத்தின் பெருமையாக பிரதமர் மோடி இருக்கிறார். நான் சிறு சிப்பாயாக எனது வேலையை செய்யவிருக்கிறேன். காங்கிரஸில் உள்ள எம்.எல்.ஏ-க்கள், நிர்வாகிகளை பா.ஜ.க-வில் இணையவைக்க 10 நாள்களுக்கு ஒரு முறை நிகழ்ச்சி நடத்தவிருக்கிறோம். இன்று நான் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறேன்'' என்றார்.
