Published:Updated:

``உத்தவ் தாக்கரே பாஜக-வின் முதுகில் குத்திவிட்டார்; அதனால்தான்..!" - ஜே.பி.நட்டா

ஜே.பி.நட்டா

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பாஜக-வின் முதுகில் குத்தினார் என்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டா குற்றம்சாட்டியிருக்கிறார்.

``உத்தவ் தாக்கரே பாஜக-வின் முதுகில் குத்திவிட்டார்; அதனால்தான்..!" - ஜே.பி.நட்டா

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பாஜக-வின் முதுகில் குத்தினார் என்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டா குற்றம்சாட்டியிருக்கிறார்.

Published:Updated:
ஜே.பி.நட்டா

மகாராஷ்டிராவில் 48 மக்களவைத் தொகுதிகள் இருக்கின்றன. இந்தத் தொகுதிகள் 2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்தத் தொகுதிகளில் சிலவற்றில் குறிப்பாக 18 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற முடியாத தொகுதிகளாக கணிக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் தொகுதிகளை அடையாளம் கண்டிருக்கும் பா.ஜ.க அவற்றில் இப்போதே தேர்தல் பணிகளை மேற்கொள்ள முடிவுசெய்திருக்கிறது.

இதற்காக பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா இன்று மகாராஷ்டிரா மாநிலம், சந்திராபூர் வந்திருந்தார். அவர் விஜய் சங்கல்ப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய நட்டா, ``2019-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு டெல்லியில் நரேந்திர மோடி, மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் என்று தெளிவாக குறிப்பிட்டோம். அதற்கு உத்தவ் தாக்கரே ஒப்புதல் கொடுத்தார். ஆனால் தேர்தல் முடிந்த பிறகு உத்தவ் தாக்கரே பா.ஜ.க-வின் முதுகில் குத்திவிட்டார். அரசியலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். உண்மையின் பக்கம்தான் ஆட்சி செல்லும். இயற்கைக்கு பொருந்தாத கூட்டணி நீண்ட நாள் நீடிக்காது.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரே பதவி வெறியில் பா.ஜ.க-வின் முதுகில் குத்திவிட்டார். பால் தாக்கரேவின் எண்ணங்களுக்கு எதிராக உத்தவ் தாக்கரே செயல்பட்டார். அதிகாரத்துக்காக உத்தவ் தாக்கரே தனது கொள்கையை தளர்த்திக்கொண்டார். கணபதி விழா, கிருஷ்ண ஜெயந்தி விழாவுக்குக்கூட தடைவிதித்தார். மகாராஷ்டிராவின் கலாசார உணர்வுகளைப் புண்படுத்தினார். அதோடு இந்திய கலாசாரத்தை புரிந்து கொள்ளாதவர்களுடன் கூட்டணி சேர்ந்தார்.

எனவேதான் அனைவரும் பார்க்கும் வகையில் அவர்களுக்கு தக்கபதிலடி கிடைத்தது. ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் புதிய அரசு அமைந்தது. இருவரும் மகாராஷ்டிராவை முன்னேற்றப்பாதையில் எடுத்துச்செல்கின்றனர். பால்கரில் 2020-ம் ஆண்டு மூன்று சாதுக்கள் படுகொலை செய்யப்பட்டபோது காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் நிர்ப்பந்தம் காரணமாக அது தொடர்பாக விசாரிக்கும் பொறுப்பை உத்தவ் தாக்கரே சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டார். மகாவிகாஷ் அகாடி என்பது மகாராஷ்டிராவில் திறக்கப்பட்ட மூன்று ஊழல் கடைகள் ஆகும். பா.ஜ.க அரசியலில் டிஜிட்டல் முறையில் சுத்தத்தை கொண்டு வந்தது" என்று தெரிவித்தார்.