Published:Updated:

``முதல்வரின் அறிவுறுத்தலின் பேரிலேயே அதிமுக அலுவலகத்தில் தாக்குதல்" - சி.வி.சண்முகம் தாக்கு

சி.வி.சண்முகம்

``ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களுடன் வந்து அதிமுக அலுவலகம் மீது தாக்குதல் நடத்தினார்.''- சி.வி.சண்முகம் விமர்சனம்

``முதல்வரின் அறிவுறுத்தலின் பேரிலேயே அதிமுக அலுவலகத்தில் தாக்குதல்" - சி.வி.சண்முகம் தாக்கு

``ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களுடன் வந்து அதிமுக அலுவலகம் மீது தாக்குதல் நடத்தினார்.''- சி.வி.சண்முகம் விமர்சனம்

Published:Updated:
சி.வி.சண்முகம்

தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சியாகச் செயல்பட்டுவரும் நிலையில் அதிமுக-வில் உட்கட்சிப்பூசல் நிலவிவருகிறது. இந்த நிலையில், இது தொடர்பாக அதிமுக-வின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் வந்து அதிமுக அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தினார். அதிமுக அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் அறை முழுவதுமாக அடித்து, உடைத்து நொறுக்கப்பட்டது. அதிமுக அலுவலகம் முழுமையாக அடித்து நொறுக்கப்பட்டு ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தமிழ்நாடு காவல்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இதனால் சிபிஐ விசாரணை கோரி வழக்கு தொடர்ந்தோம். அனைத்து ஆதாரங்கள் இருந்தும் சிபிசிஐடி விசாரணையைத் தொடங்காதது ஏன்... முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரிலேயே அதிமுக அலுவலகத்தில் தாக்குதல் நடந்திருக்கிறது. இந்தக் குற்ற சம்பவம் நடந்து இன்றோடு 53 நாள்கள் ஆகின்றன. நான் இது தொடர்பாக புகார் கொடுத்து 41 நாள்கள் ஆகின்றன'' என்றார்.