Published:Updated:

ஜெயக்குமார் கைது: ரகசிய இடத்தில் நீண்ட விசாரணை; நள்ளிரவில் ஆஜர், நீதிமன்றக் காவல்! -நடந்தது என்ன?!

ஜெயக்குமார்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுக-வினர்மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் 8 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கொலைவெறித் தாக்குதல், ஆயுதங்களைக்கொண்டு தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர்.

ஜெயக்குமார் கைது: ரகசிய இடத்தில் நீண்ட விசாரணை; நள்ளிரவில் ஆஜர், நீதிமன்றக் காவல்! -நடந்தது என்ன?!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுக-வினர்மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் 8 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கொலைவெறித் தாக்குதல், ஆயுதங்களைக்கொண்டு தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர்.

Published:Updated:
ஜெயக்குமார்

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19-ம் தேதி நடந்து முடிந்தது. வாக்குப்பதிவின்போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரிடையே சில இடங்களில் பிரச்னைகள் வெடித்தன. அந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அதிமுக-வினர் ராயபுரத்தில், திமுக நிர்வாகி ஒருவரை கள்ள வாக்கு செலுத்த வந்ததாகக் கூறி, அரை நிர்வாணப்படுத்தி சட்டையால் கைகளைக் கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை ராயபுரம் பகுதியில் 49-வது வார்டில் மக்கள் வரிசையில் நின்று தங்கள் வாக்குகளைச் செலுத்திக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள், ஒருவரை ஏற்கெனவே வேறொரு வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு, கள்ள வாக்கு செலுத்த வந்ததாகக் கூறி சுற்றிவளைத்தனர். இந்தத் தகவலறிந்து அந்த இடத்துக்கு விரைந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அந்த நபரிடம் வாக்குவாதம் செய்தார். பின்னர், அங்கிருந்த அதிமுக-வினரிடம் அந்த நபரைக் காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு கூறினார். அதையடுத்து, அதிமுக-வினர் அந்த நபரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர், அதிமுக-வினர் அந்த நபரின் சட்டையைக் கழற்றி, அவரை அரை நிர்வாணப்படுத்தி இழுத்துச் சென்றனர். அதிமுக-வினர் தாக்குவது போன்ற வீடியோ சமூக வலைதளத்திலும் பரவியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் 40 பேர்மீது, தாக்குதலுக்கு உள்ளான நரேஷ் அரை நிர்வாணப்படுத்தி தாக்கியதாக தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுக-வினர்மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் 8 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கொலைவெறித் தாக்குதல், ஆயுதங்களைக்கொண்டு தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

தொடர்ந்து, நேற்றிரவு இரவு 8 மணிக்கு பட்டினப்பாக்கத்திலுள்ள ஜெயக்குமார் வீட்டில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட ஜெயக்குமாரை காவல்துறையினர் ரகசிய இடத்தில்வைத்து நான்கு மணி நேரம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து சுமார் 12 மணியளவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை எழும்பூர் நீதிமன்றத்தில், ஜார்ஜ்டவுன் 15-வது நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் முரளிகிருஷ்ணா முன்பு காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போது, முறையான சட்ட விதிகளைப் பின்பற்றி கைதுசெய்யப்படவில்லை என ஜெயக்குமார் தரப்பு வாதாட, அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள், அரை நிர்வாணப்படுத்தித் தாக்குவது போன்ற வீடியோ இருப்பதாகவும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தூண்டுதலின் பேரில்தான் இந்தச் சம்பவம் நடைபெற்றதாகவும், அதனால்தான் அவர் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.

தொடர்ந்து நீதிபதி, ஜெயக்குமாரை 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து உடனடியாக ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர்கள் ஜாமீன் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். எனினும், அரசுத் தரப்பு, இன்று நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையைக் காரணம் காட்டி ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தனர், இதையடுத்து ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார் நீதிபதி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism