Published:Updated:

``அதிமுக ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ் உட்பட எந்த பேரணிக்கும் அனுமதி வழங்கப்படவில்லை!" - ஜெயக்குமார்

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

``எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருந்தது. தற்போது பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.'' - ஜெயக்குமார்

``அதிமுக ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ் உட்பட எந்த பேரணிக்கும் அனுமதி வழங்கப்படவில்லை!" - ஜெயக்குமார்

``எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருந்தது. தற்போது பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.'' - ஜெயக்குமார்

Published:Updated:
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருந்தது. தற்போது பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. மதக் கலவரங்கள் நடைபெறாமல் தடுப்பது அரசின் கடமை.

மதத்தின் பெயரால் கலவரம் ஏற்படும்போது அதை ஆரம்பகாலத்திலேயே அடக்கிவிட வேண்டும். ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் பாபர் மசூதி பிரச்னை வந்தபோது, எந்தவித கலவரமும் இல்லாமல் தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாக வைத்திருந்தார். தமிழ்நாட்டில் அமைதி கேள்விக்குறியானால் என்ன விளைவு ஏற்படும்?... 89, 99-ம் ஆண்டுகளில் ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டதைப் போலதான் தற்போதும் நடைபெறும்.

ஸ்டாலின் உருக்கம்
ஸ்டாலின் உருக்கம்

குண்டுவீச்சு சம்பவங்கள் தொடர்பாக திருமாவளவன் எந்த அடிப்படையில் கருத்து தெரிவித்தார் என்பதை போலீஸ் விசாரிக்க வேண்டும். ஆர்.எஸ்.பாரதி ஊடகங்களை வேசி ஊடகங்கள் என விமர்சித்தார். துரைமுருகன் அரசு ஊழியர்களின் கை, கால்களை உடைப்பேன் எனக் கூறினார். அமைச்சர் பொன்முடி பெண்களை பேருந்தில் ஓசி பயணம் எனக் கூறியது தொடர்பான சொற்றொடர் வைரலானது. இவ்வாறு பேசியதன் மூலம் அவர் பெண்களை அவமானப்படுத்தியுள்ளார். திமுக அமைச்சர்கள் தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட எந்த அமைப்பாக இருந்தாலும் சரி, அதிமுக ஆட்சிக்காலத்தில் ஊர்வலத்துக்கு அனுமதி கொடுக்கவில்லை. திமுக-வின் இரட்டை வேடத்தால் பொதுமக்கள் பயந்துள்ளனர்'' என்றார்.