Published:Updated:

``மாறி மாறிப் பேசுவதில் திமுக-வுக்கு இரட்டை நாக்கு" - ஜெயக்குமார்

ஜெயக்குமார்

கட்சி நலன் பாதிக்காத வகையில் அ.தி.மு.க - பா.ஜ.க உடனான தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்படும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

``மாறி மாறிப் பேசுவதில் திமுக-வுக்கு இரட்டை நாக்கு" - ஜெயக்குமார்

கட்சி நலன் பாதிக்காத வகையில் அ.தி.மு.க - பா.ஜ.க உடனான தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்படும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
ஜெயக்குமார்

கட்சி நலன் பாதிக்காத வகையில் அ.தி.மு.க - பா.ஜ.க உடனான தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்படும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இடப்பங்கீடு தொடர்பாக அ.தி.மு.க-வுடன், பா.ஜ.க பேச்சுவார்த்தை நடத்தியது. நகர்ப்புறத் தேர்தல் இடப்பங்கீடு முடிந்தவுடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``பா.ஜ.க-வுடன் சுமுகமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொகுதிப் பங்கீடு விவகாரத்தில், கட்சி நலன் பாதிக்காத வகையில் முடிவெடுக்கப்படும்.

ஆலோசனைக் கூட்டம்
ஆலோசனைக் கூட்டம்

கேட்கவேண்டியது பா.ஜ.க-வின் கடமை, அதை ஏற்பதா இல்லையா என்பது அ.தி.மு.க-வின் முடிவு" என்றார்.

அதைத் தொடர்ந்து தமிழக ஆளுநர் பற்றி தி.மு.க நாளிதழ் ஒன்று முன்வைத்திருக்கும் கருத்து விமர்சனம் குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு, ``தி.மு.க ஆட்சியில் இருக்கும்போது ஒன்று, ஆட்சியில் இல்லாதபோது ஒன்று பேசக்கூடிய கட்சி. மாறி மாறிப் பேசக்கூடியதில் தி.மு.க-வுக்கு இரட்டை நாக்கு" என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism