Published:Updated:

``சிங்கம் சிங்கிளாதான் வரும்; அதிமுக-வுக்கு எந்த பாதிப்பும் இல்லை!" - ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார்

``பாஜக தனித்துப் போட்டியிடுவது அந்தக் கட்சித் தலைமை எடுத்த முடிவு" என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

``சிங்கம் சிங்கிளாதான் வரும்; அதிமுக-வுக்கு எந்த பாதிப்பும் இல்லை!" - ஜெயக்குமார்

``பாஜக தனித்துப் போட்டியிடுவது அந்தக் கட்சித் தலைமை எடுத்த முடிவு" என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
அமைச்சர் ஜெயக்குமார்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கூட்டணிப் பங்கீடு குறித்து இரண்டு நாள்களாக அதிமுக-பாஜக இடையே பேச்சுவார்த்தை நீடித்துவந்த நிலையில், பாஜக தனித்துப் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

மாநிலத் தலைவர் அண்ணாமலை-பாஜக
மாநிலத் தலைவர் அண்ணாமலை-பாஜக

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "கட்சியின் நலன் மற்றும் கட்சியினரின் நலன் இவை இரண்டும் பாதிக்காத வகையில்தான் தொகுதிப் பங்கீடு இருக்கும் என்றுதான் கூறப்பட்டது. நகர்ப்புறத் தேர்தலில் பாஜக-வுடன் கூட்டணி இல்லை. எதிர்வரும் காலங்களில் கூட்டணியில் இருப்போம் என்று அவர்களுடைய விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். அவர்களை ஏற்பது குறித்து அதிமுக தலைமைதான் முடிவு செய்யும். பாஜக தனித்துப் போட்டியிடுவது என்பது அந்தக் கட்சித் தலைமை எடுத்த முடிவு. பாஜக முடிவால் அதிமுக-வுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

வெற்றிச் சின்னம் இரட்டை இலை எங்களிடம் உள்ளது. 2016-ம் ஆண்டு தனியாக நின்று அதிமுக மாபெரும் வெற்றி பெற்றது. அதிமுக ஆட்சியில் மக்களுக்கு வீடுதோறும் பொங்கல் பரிசுகள் எந்தவிதப் புகாரும் இல்லாமல் கொடுக்கப்பட்டன. திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சரியில்லை.

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பில்லை. அடாவடித்தனம், கட்டப்பஞ்சாயத்து, அராஜகத்தின் ஒட்டுமொத்த அடையாளம் திமுக. இந்த விடியா அரசு என்பது விளம்பர அரசாங்கம் மட்டும்தான். அதிமுக-வின் சாதனைகள் திமுக-வின் வேதனையாக உள்ளது. சிங்கம் சிங்கிளாதான் வரும். அதிமுக சிங்கிளாகவே மாபெரும் வெற்றிபெறும்" என்று கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism