Published:Updated:

ஒற்றைத் தலைமை விவகாரம்: ``அதிமுக-விலிருந்து ஓ.பி.எஸ்-ஸை ஓரங்கட்டும் எண்ணம் கிடையாது” - ஜெயக்குமார்

ஜெயக்குமார்

``ஒற்றைத் தலைமை விவகாரத்தில் விரைவில் சுமுக முடிவு எட்டப்படும்” என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.

ஒற்றைத் தலைமை விவகாரம்: ``அதிமுக-விலிருந்து ஓ.பி.எஸ்-ஸை ஓரங்கட்டும் எண்ணம் கிடையாது” - ஜெயக்குமார்

``ஒற்றைத் தலைமை விவகாரத்தில் விரைவில் சுமுக முடிவு எட்டப்படும்” என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
ஜெயக்குமார்

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், கடந்த சில தினங்களாக கட்சிக்குள் ஒற்றைத் தலைமை சர்ச்சை தீவிரமடைந்துள்ளது. அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளார் எடப்பாடி பழனிசாமி இருவரும் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக மாறி மாறித் தங்களின் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திவருகின்றனர். இந்த விவகாரத்தில் அதிகமான தொண்டர்கள், நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதராவாக இருப்பதாகவும், இதனால் ஓ.பன்னீா்செல்வம் தரப்பு மிகவும் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில், அதிமுக-வின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எனக்கென்று தனிப்பட்ட கருத்து கிடையாது. கட்சிக் கூட்டத்தில் கருத்துகள் பேசப்பட்டன, சொல்லப்பட்டன, வலியுறுத்தப்பட்டன... ஒரு கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கருத்துகளை உதாசீனப்படுத்த முடியாது. அதற்குச் செயல் வடிவம் கொடுக்க வேண்டும். அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும். இந்த விவகாரத்தில் கூடிய விரைவில் சுமுக முடிவு எட்டப்படும். கட்சியைப் பொறுத்த வரை ஒற்றைத் தலைமை வேண்டும் என்பதுதான் முடிவு. அதிமுக தலைமை குறித்து பொதுக்குழுதான் முடிவு செய்யும். அதிமுக-விலிருந்து ஓபிஎஸ்-ஸை ஓரங்கட்டும் எண்ணம் கிடையாது” என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism