Published:Updated:

``ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்கவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது..!'' - ஜெயக்குமார்

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

``சபாநாயகர் அப்பாவு அவருடைய வேலையை ஒழுங்காக பார்க்கட்டும். கட்டப் பஞ்சாயத்து வேலைகளைப் பார்க்கவேண்டாம்." - ஜெயக்குமார்

``ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்கவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது..!'' - ஜெயக்குமார்

``சபாநாயகர் அப்பாவு அவருடைய வேலையை ஒழுங்காக பார்க்கட்டும். கட்டப் பஞ்சாயத்து வேலைகளைப் பார்க்கவேண்டாம்." - ஜெயக்குமார்

Published:Updated:
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சென்னை பல்லவன் சாலையில் அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரத போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், கோகுல இந்திரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ``அ.தி.மு.க ஒன்றாக இருக்க வேண்டும் என அப்பாவு கூறியது பற்றி கேட்கிறீர்கள்... சபாநாயகர் அப்பாவு அவருடைய வேலையை ஒழுங்காக பார்க்கட்டும். கட்டப் பஞ்சாயத்து ராஜா போன்ற வேலைகளைப் பார்க்க வேண்டாம். இவர் கட்சி வேலையைப் பார்க்கிறாரா? இல்லை சபாநாயகர் வேலையைப் பார்க்கிறாரா?

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

ஆளுநர் விருந்தில் பங்கேற்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. அனைத்து எம்.எல்.ஏ-களுக்கும் வேலை இருக்கும். அதனால் ஆளுநர் விருந்தில் கலந்துகொள்ள வேண்டிய கட்டாயம் கிடையாது. பந்திக்கு முந்தி... படைக்குப் பிந்தி என ஓ.பி.எஸ் தரப்பினர் இருக்கிறார்கள். யார் அழைத்தாலும் சென்று பாய்போட்டுப் படுத்துக்கொள்கிறார்கள். கட்சியில் எந்த ஒரு அதிகாரமும் கிடையாது. அதனால் யாராவது தன்னை அழைக்க மாட்டார்களா என்று எண்ணி கொண்டிருக்கிறார்கள்... அப்படி அழைத்தால் உடனடியாகச் சென்று பாய்போட்டு படுத்துக் கொள்கிறார்கள்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை அ.தி.மு.க-வில் சேர்த்துக்கொள்ள முடியாது. அ.தி.மு.க-வைப் பற்றி பேசுவதற்கு டி.டி.வி.தினகரனுக்கு முகாந்திரம் கிடையாது. ஆளும் தி.மு.க அரசு மத்தியில் மண்டியிடும் வேலையைத்தான் செய்கிறது. எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியின்மீது குற்றச்சாட்டு வைக்கும்போது அதற்கு பதில்கூற வேண்டும். அதற்கு பதிலாக அவர்களை ஏளனம் செய்யக்கூடாது'' என்றார்.