Published:Updated:

``காலத்தின் கட்டாயத்தால்... அதிமுக-வுக்கு ஒற்றைத் தலைமை தேவை குறித்து விவாதம்” - ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார்

`இன்று நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமையின் அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டது' என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியிருக்கிறார்.

``காலத்தின் கட்டாயத்தால்... அதிமுக-வுக்கு ஒற்றைத் தலைமை தேவை குறித்து விவாதம்” - ஜெயக்குமார்

`இன்று நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமையின் அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டது' என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியிருக்கிறார்.

Published:Updated:
அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவரும் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். வரும் 23-ம் தேதி பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டங்கள் நடைபெறவிருக்கும் நிலையில், இந்த ஆலோசனை நடைபெற்றது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில், கட்சிக்கு ஒற்றைத் தலைமை தேவை என எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் , ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் போட்டி போட்டு முழக்கங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், கூட்டம் முடிந்த பின்னர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ``நான்கரை மணி நேரம், கருத்துச் சுதந்திரம் அடிப்படையில் தலைமைக் கழக நிர்வாகிகளிடம் ஆரோக்கியமான விவாதம் நடந்தது, நிர்வாகிகளின் கருத்துகளைக் கேட்டோம்.

சசிகலா
சசிகலா

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் அதிமுக-வுக்கு ஒற்றைத் தலைமைதான் தேவை எனக் கூறியிருக்கிறார்கள். ஒற்றைத் தலைமை யார் என்பது குறித்து குறித்து கட்சி முடிவு செய்யும். கட்சியில் இருக்கும் யார் வேண்டுமானாலும் தலைமைக்கு வர முடியும்.

முன்பிருந்த நிலை வேறு, இப்போதைய நிலைமை வேறு. எனவே காலத்தின் கட்டாயத்தால் ஒற்றைத் தலைமை குறித்து விவாதம் நடத்தினோம். சூழல் மாறியுள்ளது. எனவே ஒற்றைத் தலைமை அவசியம் என்று பெரும்பாலானோர் கூறியுள்ளனர்.

2,600 பேர் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க மனமிருக்கிறது, ஆனால் இடபற்றாக்குறையால் சிறப்பு அழைப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``காலத்தின் கட்டாயத்தால்... அதிமுக-வுக்கு ஒற்றைத் தலைமை தேவை குறித்து விவாதம்” - ஜெயக்குமார்

அதிமுக பொதுக்குழுவில் சசிகலா குறித்து எதற்கு விவாதிக்க வேண்டும்... கட்சிக்கு கிஞ்சித்தும் சம்பந்தம் இல்லாதவர் சசிகலா. சசிகலாவைப் பற்றி விவாதித்து ஏன் எங்களுடைய நேரத்தை வீணடிக்க வேண்டும்... வெற்றி, தோல்வி என்பது நாணயத்தின் இரு பக்கம் போன்றது. அதிமுக-வுக்கு அழிவு என்பதே கிடையாது. தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி மலரும். யார் வேண்டுமென்றாலும் தங்களை எதிர்க்கட்சி என்று கூறிக்கொள்ளட்டும். ஆனால் தமிழ்நாட்டில் நாங்கள்தான் முதன்மையான கட்சி. மீதி இருப்பவர்களெல்லாம் எதிரிக்கட்சிகள் கிடையாது, உதிரிக் கட்சிகள்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism