Published:Updated:

``நாங்கதான் அதிமுக... அவர் எந்தக் கட்சி என்றே எங்களுக்குத் தெரியாது” - ஜெயக்குமார்

ஜெயக்குமார்

``தேர்தல் ஆணையத்தில் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக சார்பில் நானும், பொள்ளாச்சி ஜெயராமனும் கலந்துகொண்டோம்’’ என ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.

``நாங்கதான் அதிமுக... அவர் எந்தக் கட்சி என்றே எங்களுக்குத் தெரியாது” - ஜெயக்குமார்

``தேர்தல் ஆணையத்தில் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக சார்பில் நானும், பொள்ளாச்சி ஜெயராமனும் கலந்துகொண்டோம்’’ என ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
ஜெயக்குமார்

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் நடவடிக்கைகள் இன்று தொடங்கப்பட்டுள்ளன. இதையொட்டி, தமிழ்நாட்டிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தலைமைத் தோ்தல் ஆணையர் சத்யபிரத சாகு இன்று ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அதிமுக-வில் ஒற்றைத் தலைமை விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில், எடப்பாடி பழனிசாமி சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஓ.பன்னீர்செல்வம் சார்பில் கோவை செல்வராஜ் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை செல்வராஜ்
கோவை செல்வராஜ்

இந்த நிலையில், தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்பு இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், `` வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைத்தால் வாக்காளர் பட்டியலிலுள்ள குளறுபடிகளைச் சரிசெய்ய முடியும் என்ற எங்கள் கருத்தைத் தெரிவித்திருக்கிறோம். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குளறுபடிகள் இல்லாத வாக்காளர் பட்டியல் வெளியிட வேண்டும் என அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

அ.தி.மு.க-ன்னா நாங்கதான்..... தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக-வின் இடைக்கால பொதுச்செயலாளர் சார்பில் நானும், பொள்ளாச்சி ஜெயராமன் அவர்களும் கலந்துகொண்டு பல்வேறு கருத்துகளை முன்வைத்தோம். ஓபிஎஸ் சார்பில் பங்கேற்றவர் எந்தக் கட்சி என்றே எங்களுக்குத் தெரியாது'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!