Published:Updated:

``திமுக-வின் கைக்கூலி; எத்தனை ஓ.பி.எஸ் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது!” - ஜெயக்குமார் காட்டம்

ஓ.பி.எஸ் - ஜெயகுமார்

`காலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட கலவரத்துக்கு முழுக்க முழுக்க திமுக-வின் கைக்கூலி ஓ.பி.எஸ் தான் காரணம்' என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வரும் அதிமுக-வில் தற்போது உட்கட்சி பூசல் பூதகரமாக வெடித்திருக்கிறது. பல்வேறு சலசலப்புகளுக்கு மத்தியில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைப்பெற்றது. இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு உள்ளிட்ட 16 தீர்மனங்கள் கொண்டு நிறைவேற்றப்பட்டது.

``திமுக-வின் கைக்கூலி; எத்தனை ஓ.பி.எஸ் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது!” - ஜெயக்குமார் காட்டம்

இன்று பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில், காலையில் பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் கட்சியின் தலைமை அலுவலகம் முன்பு மோதிக்கொண்டதில் பலருக்கும் காயம் ஏற்பட்டது. இதில் பேருந்து, கார்கள் சேதமடைந்தது. மேலும் பலருக்கு மண்டை உடைந்தது. இதையொட்டி, அதிமுக தலைமை கழக அலுவகம் அமைந்துள்ள பகுதி முழுவதும் பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த நிலைமையை கட்டுப்படுத்த அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து, அதிமுக தலைமை கழக அலுவலகம் வருவாய்த்துறையினரால் தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள அனைத்து அறைகளும் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அதிமுக தலைமை கழக அலுவலகம் பகுதி முழுவதும் 145 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தநிலையில், பொதுக்குழு கூட்டத்துப் பினனர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ``வரலாற்று சிறப்புமிக்க பொதுக்குழுவில் ஓ.பி.எஸ் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுக-வின் தலைமை கழகத்தை கடப்பாரையை கொண்டு துளைத்தது கண்டிக்கத்தக்கது. ஓபிஎஸ் திமுகவின் கைக்கூலியாக, பீ டீம் ஆக இருந்து கொண்டு ஒரு கீழ்தரமான ஒரு செயலை செய்து இருக்கிறார். அதிமுக தொண்டர்கள் யாரும் ஓபிஎஸ்ஐ ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எத்தனை ஓ.பி.எஸ் வந்தாலும் அதிமுக-வை அசைக்க முடியாது.

``திமுக-வின் கைக்கூலி; எத்தனை ஓ.பி.எஸ் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது!” - ஜெயக்குமார் காட்டம்

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட கலவரத்துக்கு முழுக்க முழுக்க காரணம் திமுக-வின் கைக்கூலி ஓபிஎஸ் தான். ஓ.பி.எஸ் தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்திருக்கிறார், ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது, கட்சிக்காரர்கள் மீது பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, இவை அனைத்தும் சிசிடிவி காட்சியில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு உரிய வகையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.