Published:Updated:

அதிமுக: ``உயர் நீதிமன்ற தீர்ப்பால் எந்த பின்னடைவும் இல்லை..!'' - கே.பி முனுசாமி பேட்டி

கே.பி.முனுசாமி

பொதுக்குழுவுக்கு எதிரான உயர் நீதிமன்ற தீர்ப்பால் எந்த பின்னடைவும் இல்லை என முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி தெரிவித்திருக்கிறார்.

அதிமுக: ``உயர் நீதிமன்ற தீர்ப்பால் எந்த பின்னடைவும் இல்லை..!'' - கே.பி முனுசாமி பேட்டி

பொதுக்குழுவுக்கு எதிரான உயர் நீதிமன்ற தீர்ப்பால் எந்த பின்னடைவும் இல்லை என முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
கே.பி.முனுசாமி

சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை 11-ம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கம் செய்யப்பட்டன. கட்சியின் தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்யப்பட்டார். இந்த நிலையில் அந்த பொதுக்குழு அ.தி.மு.க-வின் சட்ட விதிகளுக்கு எதிராக நடந்ததாகக் கூறி, பொதுக்குழுவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இது தொடர்பான வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், ``அ.தி.மு.க-வில் ஜூன் 23-ம் தேதி இருந்த நிலையே நீடிக்கும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் ஒன்றாக இணைந்து கூட்டும் பொதுக்குழுவே செல்லும். பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும்'' என உத்தரவிட்டனர்.

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்

இந்த நிலையில், உயர் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய இ.பி.எஸ் ஆதரவாளர் கே.பி முனுசாமி, ``உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் விவரம் முழுமையாக எங்களுக்கு கிடைக்கப்பெறவில்லை. தீர்ப்பின் விவரம் முழுமையாக கிடைத்த பிறகு தலைமை கழகத்திலிருந்து பதில் அளிக்கப்படும்.

ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் நடத்திய பொதுக்குழுவை போலவே இந்த பொதுக்குழு கூட்டமும் நடத்தப்பட்டது. பொதுக்குழுவில் கொண்டு வந்த அனைத்து தீர்மானங்களையும் உறுப்பினர்கள் முழு மனதோடு ஏற்றுக் கொண்டுள்ளனர். 2,562 பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமியை தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளனர். நீதியரசரின் இந்த தீர்ப்பு இ.பி.எஸ் தரப்புக்கு பின்னடைவு என்பதற்கான கேள்வியே எழவில்லை. சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவுசெய்யப்படும்'' என்றார்.