Published:Updated:

முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 21 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு!

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 21 இடங்களில்  ரெய்டு!
எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 21 இடங்களில் ரெய்டு!

சென்னையில் ஓர் இடத்திலும், கரூர் மாவட்டத்தில் 20 இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடந்துவருகிறது.

முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான வீடு, சொந்தமான மற்ற இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திவருகிறது. அவரின் சென்னை வீடு, கருரிலுள்ள வீடு உள்ளிட்ட 21 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகிறார்கள். கடந்த ஆட்சியின் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது போக்குவரத்துக் கழகங்களில் ஊழல் நடந்ததாகப் புகார் வந்ததையொட்டி இந்த ரெய்டு நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

`ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள்; நிரூபிக்க முடியுமா ஸ்டாலினால்?’ - எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேள்வி

சென்னையில் ஓர் இடத்திலும், கரூர் மாவட்டத்தில் 20 இடங்களிலும் இந்த ரெய்டு நடந்துவருகிறது. கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜியை எதிர்த்து போட்டியிட்டு எம்.ஆர் விஜயபாஸ்கர் தோல்வியடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிரடி ரெய்டு காரணமாக எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீட்டின் முன்பு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சருக்குச் சொந்தமான இடங்களில் நடக்கும் அதிரடி ரெய்டு காரணமாக, தமிழக அரசியல் களம் பரபரப்புடன் காணப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு