Published:Updated:

"தமிழக பாஜக பூனைக்குட்டிகளால் நிறைந்திருக்கிறது; ஸ்டாலின் உறுமினால்..!"- சுப்பிரமணியன் சுவாமி தாக்கு

சுப்பிரமணியன் சுவாமி

``தமிழக பா.ஜ.க முழுக்க பூனைக்குட்டிகளால் நிறைந்திருக்கிறது." - சுப்பிரமணியன் சுவாமி

"தமிழக பாஜக பூனைக்குட்டிகளால் நிறைந்திருக்கிறது; ஸ்டாலின் உறுமினால்..!"- சுப்பிரமணியன் சுவாமி தாக்கு

``தமிழக பா.ஜ.க முழுக்க பூனைக்குட்டிகளால் நிறைந்திருக்கிறது." - சுப்பிரமணியன் சுவாமி

Published:Updated:
சுப்பிரமணியன் சுவாமி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி, பா.ஜ.க-வை-ச் சேர்ந்தவராக இருந்தாலும்கூட, அவ்வப்போது மோடியையும், பா.ஜ.க-வையும் நேரடியாகவே விமர்சித்துவருகிறார். சீனாவின் ஆக்கிரமிப்பு விவகாரத்தில்கூட, பிரதமர் மோடியை அவர் விமர்சித்திருந்தார்

சுப்பிரமணியன் சுவாமி
சுப்பிரமணியன் சுவாமி

சமீபத்தில், கொலிஜியம் விவகாரத்திலும், மத்திய சட்டத்துறை அமைச்சர் பேசியது தவறு எனத் தெரிவித்திருந்தார். அதே சமயம் தமிழகத்தில், `இன்று பெரியார் இருந்திருந்தால் தி.மு.க-வே இருந்திருக்காது' என தி.மு.க-வையும் விமர்சிக்காமல் அவர் விடவில்லை. இந்த நிலையில், சுப்பிரமணியன் சுவாமி தற்போது தமிழ்நாடு பா.ஜ.க-வை விமர்சித்திருக்கிறார்.

இது தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி தன் ட்விட்டர் பக்கத்தில், ``தமிழகத்தில் நான் மட்டும்தான் தி.மு.க-வுக்கு எதிர்க்கட்சி என நினைக்கிறேன். மேலும், தமிழக பா.ஜ.க முழுக்கப் பூனைக்குட்டிகளால் நிறைந்திருக்கிறது. ஸ்டாலின் உறுமும்போது அவர்கள் (பூனைபோல) `மியாவ்' எனக் கத்துகிறார்கள். சினிமா கலாசாரம் தமிழக பா.ஜ.க-வைக் கெடுத்துவிட்டது" என ட்வீட் செய்திருக்கிறார்.