Published:Updated:

புதிய வெளியுறவுத் துறை செயலாளராகப் பதவியேற்கப் போகும் வினய் குவாத்ரா! - யார் இவர்... பின்னணி என்ன?

வினய் குவாத்ரா

இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளராகப் பணியாற்றிவந்த ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா ஏப்ரல் 30-ம் தேதியோடு ஓய்வுபெறுகிறார். அவருக்குப் புதிய செயலாளராக வினய் குவாத்ரா என்பவர் பதவியேற்கவிருக்கிறார்.

புதிய வெளியுறவுத் துறை செயலாளராகப் பதவியேற்கப் போகும் வினய் குவாத்ரா! - யார் இவர்... பின்னணி என்ன?

இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளராகப் பணியாற்றிவந்த ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா ஏப்ரல் 30-ம் தேதியோடு ஓய்வுபெறுகிறார். அவருக்குப் புதிய செயலாளராக வினய் குவாத்ரா என்பவர் பதவியேற்கவிருக்கிறார்.

Published:Updated:
வினய் குவாத்ரா

வெளியுறவுத்துறை என்பது ஒரு நாட்டின் கொள்கைகளை உலக நாடுகள் மத்தியில் நிறுவ உருவாக்கப்பட்ட துறை. இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளராகப் பணியாற்றிவந்த ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா ஏப்ரல் 30-ம் தேதியோடு ஓய்வு பெறுகிறார். அவருக்கு பதிலாகப் புதிய செயலாளராக வினய் குவாத்ரா என்பவர் பதவியேற்கவிருக்கிறார்.

யார் அவர்... பின்னணி என்ன என்பதைப் பார்ப்போம்!

வினய் மோகன் குவாத்ரா 1965-ல் பிறந்தார். இந்திய வெளியுறவு சேவைத்துறையில் (IFS) 1988-ல் இணைந்தார். பின்னர், 1988 முதல் 1993 வரை ஜெனீவாவில் உள்ள இந்தியாவின் ஐ.நா நிரந்தர அமைப்பில் மூன்றாம் நிலைச் செயலாளராகப் பதவிவகித்தார். இவர் ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் தேர்ந்தவர்.

ஐ.நா
ஐ.நா

பணிகள்:

1993 - 2003 காலகட்டத்தில் தென்னாப்பிரிக்கா, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுடனான தூதரகக் குழுக்களில் வினய் இடம்பெற்றார். 2003-ல் பீஜிங்கிலுள்ள இந்தியத் தூதரகத்தில் ஆலோசகராகப் பணியாற்றினார். பின்னர் 2006-ல் அதே தூதரகத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றினார்.

2006 - 2010 காலகட்டத்தில் நேபாளத்தில் உள்ள `SAARC' தலைமையகத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக இருந்தார். 2013 - 2015 காலத்தில் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அமெரிக்கப் பிரிவின் தலைவராகப் பணியாற்றினார்.

அக்டோபர் 2015 முதல் ஆகஸ்ட் 2017 வரை பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளராக (Joint Secretary) இருந்தார்.

பின்னர், 2017 முதல் 2020 பிப்ரவரி மாதம்வரை பிரான்ஸ் நாட்டுக்கான இந்தியத் தூதராகப் பணியாற்றிவந்தார்.

2020 மே முதல் இப்போது வரை நேபாளத்துக்கான இந்தியத் தூதராக இருக்கிறார். நேபாளத்தில் பணியாற்றியபோது அந்த நாட்டு அரசு தனது வரைபடத்தை இந்தியாவின் சில பகுதிகளை உள்ளடக்கி வெளியிட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த வாரம் நேபாளப் பிரதமரின் இந்திய வருகை இந்தச் சர்ச்சையை முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறது. இந்தியத் தூதராகத் தனது பணியைச் சிறப்பாகச் செய்து முடித்தார் குவாத்ரா.

வினய் குவாத்ரா
வினய் குவாத்ரா

இந்த நிலையில், பாகிஸ்தானின் உள்நாட்டு அரசியல் நிலை, ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சி, இலங்கையின் பொருளாதார நெருக்கடி, சீனாவுடனான எல்லைப் பிரச்னை, உக்ரைன் - ரஷ்யப் போர் என எண்ணற்ற நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்தியாவின் வெளியுறவுத்துறைச் செயலாளராக அடுத்த மாதம் பொறுப்பேற்கிறார் வினய் குவாத்ரா. தனது 32 ஆண்டுக்கால அனுபவங்களைக்கொண்டு இவற்றை எப்படிக் கையாளப்போகிறார் குவாத்ரா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!