Published:Updated:

`மோசடிக் கும்பல் நெட்வொர்க்; குறிவைக்கப்படும் தமிழக இளைஞர்கள்!' - மக்களவையில் கொதித்த கனிமொழி

கனிமொழி
கனிமொழி

தமிழகத்தில் வேலை வாங்கித் தருவதாக ஒரு கும்பல் இளைஞர்களிடம் மோசடியில் ஈடுபட்டிருப்பதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க எம்.பி கனிமொழி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் `ஜீரோ ஹவர்’ நேரத்தில் பேசிய தி.மு.க எம்.பி கனிமொழி தமிழகத்தில் வேலை வாங்கித்தருவதாக நடைபெறும் மோசடி குறித்து பேசினார். அப்போது அவர், ``அண்மையில் தமிழகத்தில் வேலைவாய்ப்புத் தேர்வுகளில் ஊழல் நடந்த செய்தியும், அதில் பிரதமர் அலுவலகம் தலையிட்ட செய்தியும் வெளியானது. இப்போது தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களைக் குறிவைத்து ஒரு மோசடிக் கும்பல் புறப்பட்டுள்ளது.

Representational Image
Representational Image

தமிழ்நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் புதிதாக ஒரு லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள். இந்நிலையில், தமிழகத்தின் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் இளைஞர்களையும் கல்லூரி மாணவர்களையும் குறிவைத்து ஒரு கும்பல் சென்று, `நாங்கள் முக்கியமான நிறுவனங்களிலிருந்து வருகிறோம், மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு தரப் போகிறோம்’ என்று சொல்லி குறிப்பிட்ட அளவு பணத்தை டெபாசிட்டாக ஒரு வங்கிக் கணக்கில் கட்டச் சொல்லுகிறார்கள். ஓய்வு பெற்றவர்களுக்குக் கூட சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் வேலை வாங்கித் தருவதாக அவர்கள் சொல்லி டெபாசிட் வசூலிக்கிறார்கள்.

`23 பக்க விண்ணப்பம்; ஏகப்பட்ட சான்றுகள்!- மகப்பேறு நிதியுதவித் திட்டமும் கனிமொழியின் ஆலோசனையும்

இளைஞர்கள் ஏற்கெனவே வேலைவாய்ப்பின்மையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களால் தங்களின் கல்விக் கடனையே திருப்பிச் செலுத்த முடியாத நிலை இருக்கிறது. அவர்களின் குடும்பங்கள் நிதிச் சுமையில் இருக்கின்றன. இந்தநிலையில் இப்படிப்பட்ட மோசடிக் கும்பல் வேலைவாய்ப்பு என்ற பெயரில் இளைஞர்களிடம் பணம் பறிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.

Representational Image
Representational Image

காவல்துறையில் கூட வேலைவாய்ப்பு வாங்கித் தருவதாக வசூலில் ஈடுபட்டுள்ளனர். செய்தித்தாள்களிலும் விளம்பரம் கொடுத்துள்ளார்கள். இவர்களுக்குப் பின்னால் பெரிய நெட்வொர்க் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் பார்த்துக்கொண்டிருக்காமல், இதில் தலையிட்டு சம்பந்தப்பட்டவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

அடுத்த கட்டுரைக்கு