Published:Updated:

பிரான்ஸ்: `Playboy' இதழின் அட்டைப்படத்தில் பெண் அமைச்சர்: சர்ச்சைக்குப் பிறகு விளக்கம்!

பிரான்ஸ் அமைச்சர் மார்லின் ஷியப்பா

பிரான்ஸ் அமைச்சரின் புகைப்படம் பிளேபாய் எனும் இதழின் முகப்பு அட்டையில் தோன்றியதையடுத்து, அவர் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறார்.

Published:Updated:

பிரான்ஸ்: `Playboy' இதழின் அட்டைப்படத்தில் பெண் அமைச்சர்: சர்ச்சைக்குப் பிறகு விளக்கம்!

பிரான்ஸ் அமைச்சரின் புகைப்படம் பிளேபாய் எனும் இதழின் முகப்பு அட்டையில் தோன்றியதையடுத்து, அவர் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறார்.

பிரான்ஸ் அமைச்சர் மார்லின் ஷியப்பா

மார்லின் ஷியப்பா பிரான்ஸ் நாட்டின் சமூகப் பொருளாதாரத்துறை அமைச்சராக இருக்கிறார். இவர் பெண்கள், LGBTQ+ சமூக மக்களின் உரிமைகள் குறித்து தொடர்ந்து பேசிவருபவர். இவரின் முயற்சியால் இயற்றப்பட்ட 'பெண்கள் மீதான பாலியல் சீண்டல்களுக்கு உடனடி அபராதம்' எனும் புதிய சட்டம் அங்கு மக்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டது.

மார்லின்  ஷியப்பா
மார்லின் ஷியப்பா

இந்த நிலையில், இவர் சமீபத்தில் ஆண்களுக்காக பிரத்யேகமாக வெளியிடப்படும் பிளேபாய் எனும் இதழுக்கு பேட்டியளித்திருந்தார். அதில், பெண்களின் உரிமைகள், LGBTQ+ சமூக மக்கள் குறித்தான தன்னுடைய பார்வை, அதில் இருக்கும் சவால்கள் குறித்துப் பேட்டியளித்திருந்தார். அதைத் தொடர்ந்து, அந்த இதழின் அட்டைப்படத்தில் வெள்ளை நிற உடையில் அவர் தோன்றும் புகைப்படமும், அவரின் பேட்டியும் வெளியானது.

பொதுவாக அது ஆண்கள் சார்ந்து இயங்கும் இதழ் என்பதால், அந்த இதழின் அட்டைப்படத்தில் நடிகைகளின் படங்கள் மட்டுமே வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அதில்,பிரான்ஸ் அமைச்சரின் படம் வெளியானதைத் தொடர்ந்து, சர்ச்சை வெடித்தது. அவர் கட்சியைச் சார்ந்தவர்களே விமர்சிக்கத் தொடங்கினர். இதனால், அவர்மீதான விமர்சனங்களுக்கு ட்விட்டர் பதிவில் பதிலளித்திருக்கிறார் அமைச்சர் மார்லின் ஷியப்பா.

மார்லின்  ஷியப்பா
மார்லின் ஷியப்பா

அதில், “எல்லா இடங்களிலும், எல்லா நேரத்திலும் பெண்கள் தங்களின் உடலைக் கட்டுப்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும் உரிமை இருக்கிறது. பிரான்சில் பெண்களுக்கு முழுச் சுதந்திரம் உண்டு என்பதை எதிர்ப்பாளர்கள், நயவஞ்சகர்களுக்கு உரிய மரியாதையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து, பிரெஞ்சு உள்துறை அமைச்சர் ஜெரால்ட்  டார்மானின் (Gérald Darmanin) செய்தியாளர் சந்திப்பின்போது, "மார்லின் ஷியப்பா பண்பான, தைரியமான பெண் அரசியல்வாதி. அவரின் குணாதிசயங்கள் பண்பானவை. அதை நான் மதிக்கிறேன்" என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.