Published:Updated:

``ஷிண்டே மாடலில் பாஜக-வினர் என்னை அணுகினார்கள்!" - தெலங்கானா முதல்வர் மகள் கவிதா

தெலங்கானா முதல்வரின் மகள் கவிதா ( ட்விட்டர் )

``இந்த நாட்டில், நீண்ட காலம் அரசியலில் இருக்க விரும்புகிறேன் நான். யாருடைய பெயரையும் நான் சொல்லப் போவதில்லை." - தெலங்கானா முதல்வரின் மகள் கவிதா

``ஷிண்டே மாடலில் பாஜக-வினர் என்னை அணுகினார்கள்!" - தெலங்கானா முதல்வர் மகள் கவிதா

``இந்த நாட்டில், நீண்ட காலம் அரசியலில் இருக்க விரும்புகிறேன் நான். யாருடைய பெயரையும் நான் சொல்லப் போவதில்லை." - தெலங்கானா முதல்வரின் மகள் கவிதா

Published:Updated:
தெலங்கானா முதல்வரின் மகள் கவிதா ( ட்விட்டர் )

தெலங்கானாவில் அடுத்தாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், ஆளுங்கட்சியான பாரத் ராஷ்டிரிய சமிதியை, பா.ஜ.க இப்போதிருந்தே தாக்கிவருகிறது. அதேபோல், 2024-ல் மோடியையும், பா.ஜ.க-வையும் வீழ்த்தவேண்டும் என்று தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ், மாநிலக் கட்சியாக இருந்த `தெலங்கானா ராஷ்டிரிய சமிதி'யை, `பாரத் ராஷ்டிரிய சமிதி' என தேசிய கட்சியாகக் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தார். இதற்கிடையில், `ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்களை பா.ஜ.க விலைக்கு வாங்க முயற்சிசெய்தது. அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன' என சந்திரசேகர ராவ் குற்றம்சாட்டினார்.

தெலங்கானா 
 முதல்வர் சந்திரசேகர ராவ்
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்

இந்த நிலையில், சந்திரசேகர ராவின் மகளும், சட்டமன்ற மேலவை உறுப்பினருமான கவிதா, கட்சியில் சேர்ந்துகொள்ளுமாறு பாஜக நண்பர்கள் தன்னை அணுகினார்கள் என்றும், தான் அதை நிராகரித்துவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கவிதா, பா.ஜ.க எம்.பி தர்மபுரி அரவிந்த், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் தன்னை போனில் அழைத்தனர் என்ற கருத்தை மறுத்தார். அதைத் தொடர்ந்து பா.ஜ.க-வினர் கட்சியில் சேர்ந்துகொள்ளுமாறு அணுகியதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்துப் பேசிய கவிதா, ``இந்த நாட்டில், நீண்ட காலம் அரசியலில் இருக்க விரும்புகிறேன் நான். யாருடைய பெயரையும் நான் சொல்லப் போவதில்லை.

தெலங்கானா முதல்வரின் மகள் கவிதா
தெலங்கானா முதல்வரின் மகள் கவிதா
ட்விட்டர்

பா.ஜ.க நண்பர்கள், பா.ஜ.க-வின் நட்பு வட்டாரங்களிலிருந்து, கட்சியில் சேர்ந்துகொள்ளுமாறு எனக்கு `ஷிண்டே மாடல்' முன்மொழிவு வந்தது. நாங்கள் எங்கள் சொந்த பலத்தில் தலைவர்களாக மாறுவோம், பின்கதவால் அல்ல. அதனால், அவர்களின் முன்மொழிவை நான் மிகவும் பணிவாக நிராகரித்தேன். ஏனென்றால் என் தலைவர் கே.சி.ஆர் இருக்கும் கட்சியில் என் இதயம் இருக்கிறது" எனக் கூறினார்.

ஷிண்டே மாடல் என்பது, மகாராஷ்டிராவில் ஆளுங்கட்சியை உடைத்து பா.ஜ.க-வுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஆட்சியமைக்கப்பட்டதைக் குறிக்கிறது.