Published:Updated:

அண்ணாமலைக்கு தனிப்பாடல் முதல் ரோலிங் ஆன நிர்வாகிகள் வரை... கோவை பாஜக ஆர்ப்பாட்டம் ஹைலைட்ஸ்!

பாஜக ஆர்ப்பாட்டம்

அண்ணாமலை வர சற்று தாமதமாகவே அங்குக் கூடியிருந்தவர்கள் கண்டன கோஷங்களுடன் ஒரு ரவுண்ட் ஆர்ப்பாட்டத்தை முடித்துவிட்டனர்.

அண்ணாமலைக்கு தனிப்பாடல் முதல் ரோலிங் ஆன நிர்வாகிகள் வரை... கோவை பாஜக ஆர்ப்பாட்டம் ஹைலைட்ஸ்!

அண்ணாமலை வர சற்று தாமதமாகவே அங்குக் கூடியிருந்தவர்கள் கண்டன கோஷங்களுடன் ஒரு ரவுண்ட் ஆர்ப்பாட்டத்தை முடித்துவிட்டனர்.

Published:Updated:
பாஜக ஆர்ப்பாட்டம்

பாஜக நிர்வாகிகளின் கைதை கண்டித்து கோவை சிவானந்தகாலனி பகுதியில் அண்ணாமலை தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த வாரம் முதல் கோவை மாவட்டத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றதால், பாஜக ஆர்ப்பாட்டத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது‌.

பாஜக ஆர்ப்பாட்டம்
பாஜக ஆர்ப்பாட்டம்

பாஜக தொண்டர்கள் கடுமையான சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். கோவை அரசியல் களத்தைப் பொறுத்தவரை, கடந்த சில மாதங்களாகவே போஸ்டர் முதல் பொதுக்கூட்டம் வரை திமுக, பாஜக இடையே மல்லுக்கட்டி வருகின்றனர்.

திமுக அரசைக் கண்டித்து நடக்கும் ஆர்ப்பாட்டம் என்பதால், கோவை மட்டுமல்லாமல் திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்தும் வாகனங்கள் வைத்து கூட்டம் கூட்டினர். இதன் காரணமாக அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தில்,

அண்ணாமலை
அண்ணாமலை

‘Annamalai The Face of TN Politics’ (அண்ணாமலை, தமிழக அரசியலின் முகம்) என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அங்குக் கூடியிருந்த தொண்டர்களும் அண்ணாமலையை, ‘வருங்காலே தமிழகமே.. வருங்கால முதல்வரே’ என கோஷம் போட்டுக் கொண்டிருந்தனர்.

ஒருபக்கம் ஜமாப் இசை முழங்க அண்ணாமலையை வரவேற்க தடபுடல் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மறுபக்கம் "அண்ணா...  மலை அண்ணா..." என்ற அண்ணாமலைக்காக போடப்பட்ட புதிய பாடலை ஒலிக்க வைத்துக் கொண்டிருந்தனர். சரியாக 4 மணி அளவில் ஆர்ப்பாட்டம் தொடங்கும் என்று கூறப்பட்டிருந்தது.

பாஜக ஆர்ப்பாட்டம்
பாஜக ஆர்ப்பாட்டம்

ஆனால், அண்ணாமலை வர சற்று தாமதமாகவே அங்குக் கூடியிருந்தவர்கள் கண்டன கோஷங்களுடன் ஒரு ரவுண்ட் ஆர்ப்பாட்டத்தை முடித்துவிட்டனர். சிலர், ‘அட இருங்கப்பா தலைவர் வரட்டும்,’ என்று அதை ஸ்டாப் செய்தனர்.  பிறகு அண்ணாமலை வந்ததும், மீண்டும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

முன்னதாக பேசிய பாஜக மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், “நாட்டை பாதுகாக்க ராணுவத்தில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் பாஜகவில் சேர்ந்து விட்டனர். நாட்டின் இரண்டாம் ராணுவம் பாஜகதான்.” என்றார். அண்ணாமலைக்கு சிறிது நேரத்துக்கு முன்பு மேடை ஏறிய வானதி சீனிவாசன் முதல்வர் ஸ்டாலினின் அறிக்கைக்கு பதில் அளிப்பதில்தான் ஆர்வம் காட்டினார். சேற்றில் மூழ்கி சிலிர்க்கும் சிலர் போன்று என ஸ்டாலின் கூறியதற்கு,

பாஜக ஆர்ப்பாட்டம்
பாஜக ஆர்ப்பாட்டம்

"உங்களைக் குளிப்பாட்டி, எங்கு வைத்தாலும் நீங்கள் மாறப்போவதில்லை.” என்று ஆவேசமாகப் பேசினார். முன்னாள் எம்.பி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசுகையில், “சட்டசபை தேர்தலில் கமலை எதிர்த்து வானதி எப்படி வெற்றி பெற முடியும் என கேட்டனர். வானதி தான் வென்றார். ஸ்டாலினே வந்து கொங்கு மண்டலத்தில் போட்டியிட்டாலும், இங்கு வானதி தான் வெற்றி பெறுவார். அதுதான் பாஜக.” என பன்ச் அடித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய பலரும், ஒரு நோட்டில் குறிப்பு எடுத்துக் கொண்டு அதைப் பார்த்துதான் பேசினர். அப்போதும் சிலர் ரோலிங் ஆகி ஒரு நிமிடம் ஜர்க் ஆகி நின்றார்கள். அண்ணாமலை மேடை ஏறும்போது தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். மேடை ஏறியதும் அங்கு பாஜக தாமரை தொப்பியுடன் இருந்து ஓர் சிறுமியை தூக்கி தன் முன்பு நிற்க வைத்துக் கொண்டார்.

அண்ணாமலை
அண்ணாமலை

வழக்கம் போல பேசத் தொடங்கியதும், அமைச்சர்கள் முதல்வர் வரை கடுமையாக விமர்சித்தார். உச்சகட்டமாக காவல்துறையை பார்த்து, “எங்கள் மீது கை வைத்த காவல்துறை நண்பர்கள் மீது எப்போது என்ன நடவடிக்கை பாய்ந்தாலும் நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம்.” என எச்சரித்தார்.

அதே பன்ச்சை திமுகவைப் பார்த்து, “2024 நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வந்தால் நாங்கள் பொறுப்பல்ல.” என்று எச்சரிக்கை செய்தார். பேசி முடித்து கிளம்பிய அண்ணாமலை தன் காரை சூழ்ந்து இருந்தத் தொண்டர்களுக்கு வாகனத்தின் படியில் நின்று கொண்டு கையசைத்தபடி சென்றார்.