Published:Updated:

`காஷ்மீர் முதல் பொருளாதாரம் வரை..' மோடி ஆட்சியின் 100 நாள்கள்! - நிர்மலா சீதாராமன் விளக்கம்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெருவெற்றியைப் பெற்று, மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்தது. மீண்டும் மோடி பிரதமராகத் தேர்வானார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, தற்போது நூறு நாள்களை நிறைவுசெய்திருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்த 100 நாள்களில் மோடி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர்கள், இந்தியா முழுதும் பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தி விளக்கமளித்து வருகிறார்கள். இந்த வரிசையில், ``இந்தியாவின் வளர்ச்சியை மேம்படுத்துதல், துணிச்சலான முன்முயற்சிகள் மற்றும் உறுதியான செயல்பாடுகளின் 100 நாள்கள்'' என்ற தலைப்பில் சென்னையில், பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார், மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

`காஷ்மீர் முதல் பொருளாதாரம் வரை..' மோடி ஆட்சியின் 100 நாள்கள்! -  நிர்மலா சீதாராமன் விளக்கம்

அவர் கூறுகையில்,``காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரம் சட்டப்பிரிவு 370 நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதைப் பொதுமக்களிடம் கருத்து கேட்டே செயல்படுத்தியுள்ளோம். காஷ்மீர் மக்களுக்குச் சட்டப்பிரிவு 370 உபயோகமாக இல்லை. ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் இதுகுறித்து நாங்கள் கூறியுள்ளோம். ஜனசங்க காலத்திலிருந்து சிறப்பு அந்தஸ்து ரத்தை வாக்குறுதியாக அளித்தோம். அதை இப்போது சட்டபூர்வமாக நிறைவேற்றியுள்ளோம். இந்தியா முழுதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு இருக்கிறது. ஆனால், இந்நாள்வரை காஷ்மீரில் இல்லை. இனி அம்மக்களுக்கும் இடஒதுக்கீடு செயல்பாட்டுக்கு வருகிறது.

பா.ஜ.க ஆட்சியில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கு ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக நிதி உதவி வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு ஆறாயிரம் ரூபாய் நிதியுதவி தவிர, ஓய்வூதியமாக மூன்றாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அவசியமற்ற 58 சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. சிறிய வங்கிகள் இணைப்பால் பொருளாதாரம் வளர்ச்சியடையும். ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை அடைய சிறிய வங்கிகள் இணைப்பு நிச்சயம் உதவும். ஒரே வரியான ஜி.எஸ்.டி மூலம் சரக்குப் போக்குவரத்துச் செலவு குறைந்துள்ளது.

PM Modi
PM Modi

மோட்டார் வாகன உற்பத்தியில் உள்ள சிக்கல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. பல காரணங்களால் மோட்டார் வாகன உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது. இதை மீட்பதற்கு அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஏழை மக்களுக்குத் தரமான மருத்துவச் சேவை வழங்க ஆயுஷ்மான் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் குறைந்த ப்ரீமியத்தில் உயரிய சிகிச்சையை ஏழைகள் பெறுகின்றனர்.

சென்னை டு ரஷ்யா! - மோடி, புதின் ஒப்பந்தத்தால் குறைந்த 3,000 நாட்டிக்கல் மைல்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

41 லட்சம் பேர் இதுவரை இந்தத் திட்டத்தில் சிகிச்சை பெற்றுள்ளனர். ஆயுஷ்மான் திட்டத்தின்கீழ் 16 ஆயிரம் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். ஆயுஷ்மான் திட்டத்தின்கீழ் 10 கோடி பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. வேலையிழப்பு பிரச்னையைச் சரிசெய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அதிகாரிகள் பொருளாதாரத் துறையினருடன் தொடர்புகொண்டு பேசி வருகிறார்கள்.

நிர்மலா சீதாராமன்.
நிர்மலா சீதாராமன்.

ஜி.டி.பி வளர்ச்சி விகிதத்தை அடுத்த காலாண்டில் உயர்த்துவதில் அரசு முழுக் கவனம் செலுத்துகிறது. ஜி.எஸ்.டி வருவாய் வசூல் குறித்து கவனம் செலுத்த வேண்டியதும் அவசியம். ஃபிட் இந்தியா திட்டம் மூலம் உடற்பயிற்சி செய்து ஆரோக்கியத்தை மேம்படுத்த பிரதமரால் தொடர்ந்து ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. உலக யோகா தினம் நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. பயங்கரவாதத்தைத் தடுக்க, சர்வதேச அளவில் இந்தியா பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. சந்திரயான் 2 திட்டத்தில் 99.9 சதவிகிதம் வெற்றி கிடைத்துள்ளது. இஸ்ரோ திட்டங்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து ஆதரவு அளிக்கும்'' என்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு