Published:Updated:

கௌதம் கம்பீருக்குக் கொலை மிரட்டல்! - பாதுகாப்பை பலப்படுத்திய போலீஸ்

பாஜக எம்.பி கௌதம் கம்பீருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்திருக்கின்றனர்.

கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய கௌதம் கம்பீர் பா.ஜ.க-வின் கிழக்கு டெல்லி எம்.பி-யாக இருக்கிறார். முழு நேர அரசியலில் முனைப்புக் காட்டிவரும், கௌதம் கம்பீருக்கு காஷ்மீர் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கொலை மிரட்டல்விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தீவிரவாதிகள் இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுதிருப்பதாகக் கூறப்படுகிறது. தனக்குக் கொலை மிரட்டல் வந்ததை அடுத்து, கௌதம் கம்பீர் டெல்லி போலீஸில் உடனடியாக புகார் செய்திருக்கிறார். அதனால், போலீஸார் டெல்லியிலிருக்கும் கௌதம் கம்பீர் இல்லத்துக்குப் பாதுகாப்பை அதிகரித்திருக்கின்றனர். இது குறித்து கௌதம் கம்பீரின் செயலாளர் கௌரவ் அரோரா டெல்லி போலீஸாருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், ``கௌதம் கம்பீருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் காஷ்மீர் தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்திருக்கின்றனர்.

கவுதம் கம்பீர்
கவுதம் கம்பீர்

கௌதம் கம்பீருக்கும், அவர் குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்து இ-மெயில் அனுப்பியிருக்கின்றனர். இது குறித்து விசாரித்து, தேவையான பாதுகாப்பு கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கடிதம் டெல்லி மத்திய மாவட்ட டி.சி.பி-க்கு அனுப்பப்பட்டிருக்கிறது. கொலை மிரட்டலை டி.சி.பி ஸ்வேதா சௌகான் உறுதிப்படுத்தியிருக்கிறார். இது தொடர்பாகப் பேட்டியளித்த அவர், ``கௌதம் கம்பீர் தனக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் காஷ்மீர் தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுதிருப்பதாகக் கூறி எங்களை அணுகியிருக்கிறார். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. அதோடு கௌதம் கம்பீரின் வீட்டுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.

கௌதம் கம்பீர், பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தீவிரவாதத்தைக் கடுமையாக எதிர்த்துவருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் எல்லை தாண்டிய தீவிரவாதத்தை முற்றிலும் கைவிடும் வரை அந்த நாட்டுடன் எந்தவித உறவும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தார்.

`தீவிரவாதம்தான் பிரச்னை.. மக்கள் இல்லை!’ - பாக்., சிறுமிக்கு உதவியது குறித்து கம்பீர்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு