Published:Updated:

`டெல்லியை பாரிஸாக மாற்றுவோம் என பொய் சொல்ல மாட்டோம்!’- ஆம் ஆத்மியை விமர்சிக்கும் கம்பீர்

கவுதம் கம்பீர்
கவுதம் கம்பீர்

``நல்ல வேட்பாளர்களை நாங்கள் நிறுத்தியுள்ளோம். நல்ல வேட்பாளர்கள் எங்களுக்கு கிடைத்துள்ளதால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கவுதம் கம்பீர் பேசியுள்ளார்.

டெல்லி சட்டமன்றத் தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. தேர்தல் தொடர்பான பிரசாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில், ஆம் ஆத்மி கட்சியும் பா.ஜ.க-வும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், கிரிக்கெட் வீரரும் பா.ஜ.க-வின் நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீர் அரவிந்த் கெஜ்ரிவாலை விமர்சித்துப் பேசியுள்ளார்.

கெஜ்ரிவால்
கெஜ்ரிவால்

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கவுதம் கம்பீர், ``நாட்டின் தலைநகரை லண்டனாக அல்லது பாரிஸாக மாற்றுவோம் போன்ற பொய்யான வாக்குறுதிகளை கூறமாட்டோம். டெல்லியை சிறந்த மற்றும் பாதுகாப்பான இடமாக மாற்றுவோம். எதை எங்களால் செய்ய முடியுமோ அதை மட்டுமே உறுதியாகச் சொல்வோம். கடந்த 5 ஆண்டுகளில் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களுக்குத் துரோகம் இழைத்துள்ளார்” என்று கூறினார்.

Vikatan

மேலும், ``பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், சுத்தமான குடிநீர் மற்றும் பேருந்துகள் தொடர்பான வாக்குறுதிகளை அவர் அளித்த போதிலும் எதையும் அவர் நிறைவேற்றவில்லை. டெல்லியில் நடைபெற இருக்கும் தேர்தலில் பா.ஜ.க சிறப்பாக செயல்படும். ஏனெனில், நல்ல வேட்பாளர்களை நாங்கள் நிறுத்தியுள்ளோம். நல்ல வேட்பாளர்கள் எங்களுக்கு கிடைத்துள்ளதால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர்கள் மிகச்சிறப்பாக செயலாற்றுவார்கள்” என்று பேசினார்.

பின் செல்ல