Published:Updated:

``தமிழ்நாட்டின் துணை முதல்வராக உதயநிதி விரைவில் பொறுப்பேற்பார்" - கௌதம சிகாமணி எம்.பி

கௌதம சிகாமணி

"நாளை கழகத்தின் தலைவராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்கும் போது, தமிழகமே அவர் பின்னால் செல்லும்" - கௌதம சிகாமணி

``தமிழ்நாட்டின் துணை முதல்வராக உதயநிதி விரைவில் பொறுப்பேற்பார்" - கௌதம சிகாமணி எம்.பி

"நாளை கழகத்தின் தலைவராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்கும் போது, தமிழகமே அவர் பின்னால் செல்லும்" - கௌதம சிகாமணி

Published:Updated:
கௌதம சிகாமணி

தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழா, உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பில் இன்று விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதில், விழுப்புரம், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர் பொன்முடியின் மகனும் கள்ளக்குறிச்சி எம்.பி-யுமான கௌதம சிகாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய கவுதம சிகாமணி, ``உதயநிதி ஸ்டாலினின் முதல் திரைப்படம், 'ஒரு கல் ஒரு கண்ணாடி'. அப்பவே அவர் ஒரு கல்லை எடுத்துவிட்டார். அதன் மூலம், தமிழகத்தின் பெரும்பாலான மக்களை தன் ரசிகர்களாக ஈர்த்தார். 

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் ஒரு செங்கல்லை எடுத்தார். அது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செங்கல். ஒன்றிய அதிகாரத்தில் இருக்கும் மோடி, அமித் ஷா எல்லாம் ஆடிப்போகும் அளவிற்கு ஒற்றை செங்கல்லால் தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றி காட்டியவர் உதயநிதி ஸ்டாலின். விழுப்புரம் மாவட்டத்தில் இத்தனை பேர் மாநில பொறுப்புகளில் இருப்பதற்கு காரணம், உதயநிதி ஸ்டாலின் தான். ஒவ்வொருவரையும் பார்த்து பார்த்து மேலே ஏற்றியவர் அவர். இன்று பலரும் அமைச்சராக, நாடாளுமன்ற உறுப்பினராக, சட்டமன்ற உறுப்பினராக ஆகி இருக்கிறார்கள். ஆனால், அவரோ சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக மட்டுமே இருக்கிறார். இன்று அப்படி இருக்கிறார். ஆனால், மிக விரைவில் தமிழகத்தின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்பார்கள். அவரின் பணி, தமிழகம் முழுக்க அனைத்து மக்களுக்கும் சென்று சேரும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.

இந்த கூட்டத்தின் வாயிலாக தமிழக முதலமைச்சருக்கு ஒரு கோரிக்கையாக இதனை நாங்கள் வைக்கிறோம். கூடிய விரைவில் உதயநிதி ஸ்டாலின் அவர்களை துணை முதலமைச்சராக அமர வையுங்கள். இந்த தமிழகமே அவர் பின்னால் இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டும் விதமாக, இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் மிகப்பெரிய வெற்றியை அவர் பெற்றுத்தருவார் என்பதை சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். 

நிகழ்ச்சி மேடையில் கௌதம சிகாமணி
நிகழ்ச்சி மேடையில் கௌதம சிகாமணி

2003 -லே, தலைவர் நற்பணி மன்றம் சார்பிலே முதன் முறையாக உதயநிதி தலைமையில் மிகப்பெரிய விளையாட்டு போட்டியை விழுப்புரத்திலே நடத்தினோம். அதனை உதயநிதி ஸ்டாலின் அவர்களும் மறக்காமல் சொல்வார். நாளை கழகத்தின் தலைவராக அவர் பொறுப்பேற்கும் போது, தமிழகமே அவர் பின்னால் செல்லும்" என்றார்.