Published:Updated:

``பொய்களால் மக்களை திசைதிருப்புகிறார் மோடி" - இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா காட்டம்

மாநில மாநாடு - புதுவை

"புதுவை மாநிலத்தில் கவர்னர் அலுவலகம் அரசியல் மையமாகச் செயல்படுகிறது. மக்கள் தேர்வுசெய்த மாநில அரசைப் புறக்கணித்துவிட்டு, கவர்னர் அலுவலம் மூலம் ஆதிக்கத்தைத் திணிக்க பாஜக முயல்கிறது." - டி.ராஜா

``பொய்களால் மக்களை திசைதிருப்புகிறார் மோடி" - இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா காட்டம்

"புதுவை மாநிலத்தில் கவர்னர் அலுவலகம் அரசியல் மையமாகச் செயல்படுகிறது. மக்கள் தேர்வுசெய்த மாநில அரசைப் புறக்கணித்துவிட்டு, கவர்னர் அலுவலம் மூலம் ஆதிக்கத்தைத் திணிக்க பாஜக முயல்கிறது." - டி.ராஜா

Published:Updated:
மாநில மாநாடு - புதுவை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது மாநில மாநாடு, புதுவையிலுள்ள தனியார் திருமண மண்டப அரங்கத்தில் நேற்றும் இன்றும் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்ற அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா நிருபர்களிடம் பேசியபோது, "இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு, அக்டோபர் 14-ம் தேதி, ஆந்திரா மாநிலத்திலுள்ள விஜயவாடாவில் நடக்கிறது. அதற்கு முன்பாக அனைத்து மாநிலங்களிலும் மாநாடு நடத்தப்படுகிறது. புதுவையில் இன்று மாநாடு தொடங்குகிறது. எங்கள் கட்சி மாநாடுகளில், அரசியல் தீர்மானம் விவாதத்துக்கு வந்திருக்கிறது. இந்தியாவின் நிலைமை, உலக நிலைமையை ஆய்வுசெய்து கட்சியின் கடமைகளை, மக்கள் முன்புள்ள சவால்களை விளக்கிவருகிறோம். மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு... மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் விரோத அரசாகச் செயல்பட்டுவருகிறது. மாநில உரிமைகளைப் பறித்துவருகிறது. சமூக நல்லிணக்கத்தைக் குலைத்து, மோதல்களைப் பெருக்கிவருகிறது.

 புதுச்சேரி
புதுச்சேரி

இந்தச் சூழலில் இந்தியாவைக் காப்பாற்றவும், அரசியல் சட்டத்தை, ஜனநாயகத்தைக் காப்பாற்றவும் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என எங்கள் கட்சி வலியுறுத்திவருகிறது. மோடி, தான் அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. இரண்டு கோடி பேருக்கு வேலை தரப்படும் என்றார். தற்போது வேலையில்லா திண்டாட்டம்தான் அதிகரித்துவருகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பொய்களை அள்ளி வீசி, மக்களை திசைதிருப்ப மோடி முயல்கிறார். இஸ்லாமியர்கள், சிறுபான்மையினர் மீது அடக்குமுறை, கொடுமைகள் அதிகரித்துவருகின்றன. பட்டியலினப் பெண்கள் மீதான வன்கொடுமை அதிகரித்துவருகிறது. சமூகரீதியாகக் கொந்தளிப்பு நிலை இந்தியாவில் உருவாகியிருக்கிறது. அரசியல், பொருளாதார நெருக்கடி ஒருபுறம், சமூகரீதியான கொந்தளிப்பு ஒருபுறம் ஏற்பட்டிருக்கிறது.

நாட்டின் ஜனநாயகம், கூட்டாட்சி நெறிமுறை, அரசியல் சட்டங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையை எங்கள் கட்சி வலியுறுத்திவருகிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-வை வீழ்த்த அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் என எங்கள் கட்சி வலியுறுத்திவருகிறது. நிதிஷ்குமார் பாஜக-வுடன் உறவை முறித்துக்கொண்டு வெளியேறியிருக்கிறார். புதிய ஆட்சியை பீகாரில் ஏற்படுத்தியிருக்கிறார். இது வரவேற்கத்தக்கது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இது இந்தியா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 2024 தேர்தலில் இது எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுவை மாநிலத்தில் கவர்னர் அலுவலகம் அரசியல் மையமாகச் செயல்படுகிறது. மக்கள் தேர்வுசெய்த மாநில அரசைப் புறக்கணித்துவிட்டு கவர்னர் அலுவலம் மூலம் ஆதிக்கத்தைத் திணிக்க பாஜக முயல்கிறது. மாநில உரிமை, நலன் பறிக்கப்படுகிறது. சட்டமன்றம் செயல்பட முடியாத அளவுக்கு பாஜக ஆதிக்கம் செலுத்திவருகிறது. இதை எங்கள் கட்சி கடுமையாக எதிர்த்துவருகிறது. அதிமுக கொள்கை இல்லாத நிலையில் சீர்குலைந்துவருகிறது. இதை பாஜக பயன்படுத்திவருகிறது. இதை மக்கள் கவனத்தில்கொள்ள வேண்டும்" என்றார்.