Published:Updated:

`இன்னொரு மசோதா தந்தால், 2 மாநிலங்களைப் பிடித்து விடுவோம்!’- பா.ஜ.க-வைக் கலாய்த்த குலாம் நபி ஆசாத்

குலாம் நபி ஆசாத்
குலாம் நபி ஆசாத்

`ஒரு மதத்தை மற்றொரு மதத்துக்கு எதிராகவும், ஒரு சாதியை மற்றொரு சாதிக்கு எதிராகவும் நிலைநிறுத்துகிறார்கள்' என்று பா.ஜ.க-வை விமர்சித்துப் பேசியுள்ளார், குலாம் நபி ஆசாத்.

குடியுரிமைச் சட்டத் திருத்தம் மற்றும் என்.ஆர்.சி-க்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் உட்பட பலரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகள் உட்பட பல அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அஸ்ஸாமில் உள்ள கவுஹாத்தியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் CAA மற்றும் NRC தொடர்பாக பா.ஜ.க-வை விமர்சித்துப் பேசியுள்ளார்.

மோடி மற்றும் அமித் ஷா
மோடி மற்றும் அமித் ஷா

மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவரான குலாம் நபி ஆசாத், ``மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் தேர்தல் வருவதற்கு சில நாள்களுக்கு முன்பு ஆர்டிகிள் 370 சட்டப் பிரிவை ரத்து செய்தனர். ஆர்டிகிள் 370-க்கு எதிராகப் பேசிய ஒவ்வொரு கட்சிக்கு எதிராக பிரதமரும் முதலமைச்சர்களும் அமைச்சர்களும் நாடு முழுவதும் விளம்பரங்கள் செய்தனர்.

பா.ஜ.க-வை தோற்கடித்ததற்காக மகாராஷ்டிராவில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் நன்றியைக் கூறிக்கொள்கிறேன். மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய இரு மாநிலங்களையும் அவர்கள் இழந்தனர். ஆனால், ஹரியானாவில் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களைத் திரட்டி ஆட்சி அமைத்தனர். இருந்தாலும், அவர்கள் தோல்வியடைந்துள்ளனர்” என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், ``குடியுரிமைச் சட்டத் திருத்தம் மற்றும் என்.ஆர்.சியைக் கொண்டுவந்து தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர். விரைவில் நடைபெறப்போகும் டெல்லி தேர்தலிலும் தோல்வியடையப் போகின்றனர். அடுத்த முறை வேறு ஒரு மசோதாவை நீங்கள் கொண்டுவர வேண்டும். அப்போதுதான், நாங்கள் இன்னும் இரண்டு மாநிலங்களில் வெற்றிபெற முடியும்” என்றார்.

குலாம் நபி ஆசாத்
குலாம் நபி ஆசாத்
Twitter

மேலும், ``பா.ஜ.க-வின் அடிப்படையே நாட்டை பிளவுபடுத்துவதுதான். ஆர்டிகிள் 370, 371 மற்றும் சில சட்டங்களின் பெயர்களில் நாட்டைப் பிளவுபடுத்துகிறார்கள். அவர்கள், ஒரு பிரிவை மற்றொரு பிரிவுக்கு எதிராகவும், ஒரு மதத்தை மற்றொரு மதத்துக்கு எதிராகவும், ஒரு சாதியை மற்றொரு சாதிக்கு எதிராகவும் நிலைநிறுத்துகிறார்கள்” என்று பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு