Published:Updated:

‘கை’கழுவிய குலாம் நபி ஆசாத்... கரையும் காங்கிரஸ், மீள என்ன செய்ய வேண்டும்?

குலாம் நபி ஆசாத்
பிரீமியம் ஸ்டோரி
குலாம் நபி ஆசாத்

காங்கிரஸிலிருந்த பா.ஜ.க தலைவர்தான் குலாம் நபி ஆசாத். ஆனாலும்கூட ஐம்பது ஆண்டுக்காலம் கட்சியிலிருந்த அவரின் கடிதத்தை, காங்கிரஸ் எளிதில் கடந்து சென்றுவிடக் கூடாது.

‘கை’கழுவிய குலாம் நபி ஆசாத்... கரையும் காங்கிரஸ், மீள என்ன செய்ய வேண்டும்?

காங்கிரஸிலிருந்த பா.ஜ.க தலைவர்தான் குலாம் நபி ஆசாத். ஆனாலும்கூட ஐம்பது ஆண்டுக்காலம் கட்சியிலிருந்த அவரின் கடிதத்தை, காங்கிரஸ் எளிதில் கடந்து சென்றுவிடக் கூடாது.

Published:Updated:
குலாம் நபி ஆசாத்
பிரீமியம் ஸ்டோரி
குலாம் நபி ஆசாத்

சிந்தியா, ஹர்திக் படேல், கபில் சிபல் வரிசையில் குலாம் நபி ஆசாத்தும் இணைந்துவிட்டார். 2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் உத்தியாக ‘பாரத இணைப்பு நடைப்பயண’த்தில் (பாரத் ஜோதோ யாத்ரா) காங்கிரஸ் முனைப்பு காட்டிவரும் வேளையில், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே விலகியிருப்பது தேசிய அரசியலில் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த விலகல், காங்கிரஸ் கட்சிக்கு எந்த அளவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும்?

குலாம் நபி ஆசாத்
குலாம் நபி ஆசாத்

‘கை’கழுவிய குலாம் நபி ஆசாத்!

குலாம் நபி ஆசாத்துக்கும், காங்கிரஸ் தலைமைக்கும் சில காலமாகவே மோதல் போக்கு நிலவிவந்தது. அதிருப்தித் தலைவர்கள் 23 பேரைச் சேர்த்துக்கொண்டு பல்வேறு சந்தர்ப்பங்களில் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து, தலைமைக்குக் கடிதங்கள் எழுதிக்கொண்டேயிருந்தார். இது தலைமைக்குத் தனி அழுத்தத்தை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு, அவரது ராஜ்ய சபா பதவிக்காலம் முடிவடைந்தபோது, மீண்டும் எம்.பி பதவி நீட்டிக்கப்படவில்லை. ஏற்கெனவே மோதல் இருந்துவந்த நிலையில், கட்சியின் இந்த முடிவும் சலசலப்பை ஏற்படுத்தியது. அந்தச் சூழலில், ‘எனக்கு எம்.பி-யாகவோ, அமைச்சராகவோ இருக்க விருப்பமில்லை. சுதந்திரமாக இருக்கவே விரும்புகிறேன்’ எனச் சமாளித்தார்.

காஷ்மீர் சட்டசபைத் தேர்தல் பிரசாரக்குழுத் தலைவராக, சில நாள்களுக்கு முன்பு குலாம் நபி ஆசாத் நியமிக்கப்பட்டார். ஆனால், நியமிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே அந்தப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த நிலையில்தான் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்துமே விலகுவதாக அறிவித்திருக்கிறார். மேலும், காங்கிரஸின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு ஐந்து பக்கக் கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார். அதில் கட்சித் தலைமைமீது அடுக்கடுக்காகப் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்திருக்கிறார்.

சோனியா - ராகுல் காந்தி
சோனியா - ராகுல் காந்தி

‘கனத்த இதயத்தோடு பந்தத்தை முடித்துக்கொள்கிறேன்!’

‘2013-ல் காங்கிரஸின் துணைத் தலைவராக ராகுல் காந்தியை நியமித்ததிலிருந்து, அனுபவம் மிக்க மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டனர். கட்சி அதல பாதாளத்துக்குச் சென்று கொண்டிருப்பது குறித்து நானும், கபில் சிபலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் உங்களுக்குக் கவனப்படுத்தினோம். அப்போதெல்லாம் காங்கிரஸ் தொண்டர்களாலேயே நாங்கள் தாக்கப்பட்டோம். அவர்களை ராகுல் காந்தி கண்டிக்காமல் பாராட்டினார். குழந்தைத்தனமாக நடந்துகொள்ளும் தனிநபர் ஒருவர் கையில், கட்சியின் தலைமை கடந்த எட்டு ஆண்டுகளாக ஒப்படைக்கப்பட்டதுதான் கட்சியின் பின்னடைவுக்குக் காரணம். கனத்த இதயத்தோடு காங்கிரஸ் கட்சியுடனான எனது ஐம்பது ஆண்டுக் கால பந்தத்தை முடித்துக்கொள்கிறேன்’ என அந்தக் கடிதத்தில் ராகுல் காந்தியை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார் குலாம் நபி ஆசாத்.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

“சந்தர்ப்பவாதிகள் வெளியேறத்தான் செய்வார்கள்!”

இந்த விலகல் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் கேட்டோம். “குடும்பம், தொழில், பொதுவாழ்க்கை என ஓர் அமைப்பாக இருக்கும் எந்த ஒன்றும் குறை நிறைகளோடுதான் இருக்கும். அதற்காக `நான் அந்த அமைப்பிலிருந்து வெளியேறுகிறேன்’ என்பது ஒருவரின் ஓடுகாலித்தனத்தைக் காட்டுகிறது. குலாம் நபி ஆசாத் போன்றவர்கள் கட்சியில் நீண்டகாலம் பொறுப்பிலிருந்து மிகப்பெரிய இடத்துக்கு உயர்ந்திருக்கிறார்கள். பல்வேறு நலன்களை அனுபவித்திருக்கிறார்கள். இவற்றுக்கெல்லாம் கட்சித் தலைமைதான் காரணமாக இருந்திருக்கிறது. அப்போதெல்லாம் தெரியாத இந்தக் குறைகள் இப்போது எப்படித் தெரிந்தன... மரத்தில் பழம் இல்லையென்றால், பழம் இருக்கும் இடத்தை நோக்கிப் பறவைகள் பறந்துவிடும். இது சந்தர்ப்பவாதம். அவர்கள் வெளியேறத்தான் செய்வார்கள். அதுதான் கட்சிக்கு நல்லது” என்றார்.

ஆர்.கே.ராதாகிருஷ்ணன்
ஆர்.கே.ராதாகிருஷ்ணன்

“யாத்திரையெல்லாம் வைகோ காலத்து அரசியல்!”

காங்கிரஸிலிருந்து அதன் முக்கியத் தலைவர்கள் தொடர்ந்து வெளியில் செல்வது குறித்து மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணனிடம் கருத்து கேட்டோம். “காங்கிரஸிலிருந்த பா.ஜ.க தலைவர்தான் குலாம் நபி ஆசாத். ஆனாலும்கூட ஐம்பது ஆண்டுக்காலம் கட்சியிலிருந்த அவரின் கடிதத்தை, காங்கிரஸ் எளிதில் கடந்து சென்றுவிடக் கூடாது. ஏற்கெனவே நலிவடைந்து, அதல பாதாளத்திலிருக்கும் காங்கிரஸில் அவரது வெளியேற்றத்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுமா என்பதே வேடிக்கையான கேள்வி. உட்கட்சி விவகாரத்தைச் சரிசெய்யாமல், இப்போது காங்கிரஸ் செய்துவரும் எந்த முன்னெடுப்பும் மக்கள் மத்தியில் எடுபடாது. மக்களை, குறிப்பாக இளைஞர்களைச் சென்றடைவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைத்தான் காங்கிரஸ் கட்சி இப்போது கவனத்தில்கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு யாத்திரை செல்கிறேன் என்பது வைகோ காலத்து அரசியல். அது எடுபடாது” என்றார்.

கடுமையான சுயவிமர்சனமே காங்கிரஸின் முதன்மைத் தேவை!