Published:Updated:

``காங்கிரஸ் கட்சியால் மட்டுமே பாஜக-வுக்கு சவால்விட முடியும்!" - அடித்துச் சொல்லும் குலாம் நபி ஆசாத்

குலாம் நபி ஆசாத்

``குஜராத்தில் காங்கிரஸ் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று விரும்புகிறேன்." - குலாம் நபி ஆசாத்

``காங்கிரஸ் கட்சியால் மட்டுமே பாஜக-வுக்கு சவால்விட முடியும்!" - அடித்துச் சொல்லும் குலாம் நபி ஆசாத்

``குஜராத்தில் காங்கிரஸ் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று விரும்புகிறேன்." - குலாம் நபி ஆசாத்

Published:Updated:
குலாம் நபி ஆசாத்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சராக இருந்தவர். மத்திய அமைச்சர், இந்திய காங்கிரஸ் கட்சியின் அரசியல் விவகாரக்குழு உறுப்பினர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளையும் வகித்திருக்கிறார். ஆனால், தற்போது அவர் அந்தக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகி, புதிய கட்சி ஒன்றைத் தொடங்கியிருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர்கள்
காங்கிரஸ் தலைவர்கள்
ட்விட்டர்

இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ``காங்கிரஸ் கட்சியின் அமைப்பு பலவீனமடைந்ததால்தான், நான் அந்தக் கட்சியிலிருந்து விலகினேன். ஆனால், அவர்களின் மதச்சார்பின்மை கொள்கைக்கு நான் எதிரானவன் அல்ல. குஜராத்தில் காங்கிரஸ் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று விரும்புகிறேன். ஆம் ஆத்மி டெல்லி யூனியன் பிரதேசத்தின் கட்சி மட்டுமே. அவர்களால் பஞ்சாப்பைக்கூடத் திறமையாக வழிநடத்த முடியாது.

அரவிந்த் கெஜ்ரிவால் - பக்வந்த் மான்
அரவிந்த் கெஜ்ரிவால் - பக்வந்த் மான்

குஜராத், இமாச்சலப் பிரதேச சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியால் மட்டுமே பா.ஜ.க-வுக்குச் சவால்விட முடியும். காங்கிரஸ் கட்சி இந்து, முஸ்லிம், விவசாயிகள் என அனைவரையும் நீண்டகாலமாகத் தன்னுடன் வைத்திருக்கிறது. இந்த மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியால் எதுவும் செய்ய முடியாது. பஞ்சாப் மக்கள் இனி அவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள்" எனத் தெரிவித்தார்.