Published:Updated:

காஷ்மீர்: `தீவிரவாதிகள் ஆயுதங்களைக் கைவிட வேண்டும்’ என்ற குலாம் நபி ஆசாத்துக்குக் கொலை மிரட்டல்!

குலாம் நபி ஆசாத்

``துப்பாக்கி எப்போதும் ஒரு தீர்வாகாது. துப்பாக்கி அழிவையும் துயரங்களையும் மட்டுமே தருகிறது." - குலாம் நபி ஆசாத்

காஷ்மீர்: `தீவிரவாதிகள் ஆயுதங்களைக் கைவிட வேண்டும்’ என்ற குலாம் நபி ஆசாத்துக்குக் கொலை மிரட்டல்!

``துப்பாக்கி எப்போதும் ஒரு தீர்வாகாது. துப்பாக்கி அழிவையும் துயரங்களையும் மட்டுமே தருகிறது." - குலாம் நபி ஆசாத்

Published:Updated:
குலாம் நபி ஆசாத்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத், அந்தக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகி புதிய கட்சி தொடங்கும் திட்டத்தையும் அறிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, ஜம்மு- காஷ்மீரில் பல பொதுக்கூட்டங்களையும் நடத்திவருகிறார். அதனடிப்படையில், காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் ஒரு பொதுக்கூட்டம் நடத்தினார்.

அதில் பேசிய குலாம் நபி ஆசாத், ``ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கியை எடுத்தவர்களுக்கு எனது வேண்டுகோள். நினைவில் கொள்ளுங்கள், இந்தத் துப்பாக்கி எப்போதும் ஒரு தீர்வாகாது. துப்பாக்கி அழிவையும், துயரங்களையும் மட்டுமே தருகிறது. நான் அதிக ரத்தம் சிந்துவதையும், இளைஞர்கள் கொன்று குவிக்கப்படுவதையும் காண விரும்பவில்லை. சொந்த வீட்டை ஒழுங்கமைக்க முடியாத ஒரு தோல்வியுற்ற நாடு, நமது மாநிலம் மற்றும் நாட்டின் அழிவை ஏற்படுத்துவதில் கவனமாக இருக்கிறது" எனப் பேசினார்.

குலாம் நபி ஆசாத்
குலாம் நபி ஆசாத்

அதைத் தொடர்ந்து அவருக்குத் தீவிரவாதிகளிடமிருந்து கொலை மிரட்டல் வருவதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வெளியான தகவலில், பா.ஜ.க-வின் கட்டளைப்படி செயல்படும் 'துரோகி' என்று கூறப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து அவருக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு பதிலளித்த குலாம் நபி ஆசாத், "இத்தகைய அச்சுறுத்தல் அமைதிப் பாதையிலிருந்து என்னைத் தடுக்காது" எனத் தெரிவித்திருக்கிறார்.