Published:Updated:

``ஓராண்டுக்குள் பேரக்குழந்தை அல்லது ரூ.5 கோடி கொடு” - மகனுக்குப் பெற்றோர் விதித்த கெடு

பிரசாத் தன் மனைவியுடன்...

``ஓராண்டுக்குள் பேரக்குழந்தையை பெற்றுக்கொடுக்க வேண்டும் அல்லது 5 கோடி ரூபாய் பணத்தைக் கொடுக்க வேண்டும்” என்று பெற்றோர் மகனிடம் கேட்டுள்ளனர்.

``ஓராண்டுக்குள் பேரக்குழந்தை அல்லது ரூ.5 கோடி கொடு” - மகனுக்குப் பெற்றோர் விதித்த கெடு

``ஓராண்டுக்குள் பேரக்குழந்தையை பெற்றுக்கொடுக்க வேண்டும் அல்லது 5 கோடி ரூபாய் பணத்தைக் கொடுக்க வேண்டும்” என்று பெற்றோர் மகனிடம் கேட்டுள்ளனர்.

Published:Updated:
பிரசாத் தன் மனைவியுடன்...

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்த பிறகு பேரக்குழந்தைகளை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவது வழக்கம். இன்றைய காலகட்டத்தில் பலர் குழந்தை பெற்றுக்கொள்வதைத் தள்ளிப்போடுகின்றனர். உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள ஹரித்வாரைச் சேர்ந்த எஸ்.ஆர்.பிரசாத் என்பவர் தன் மகனை அமெரிக்காவில் படிக்கவைத்து கடந்த 2016-ம் ஆண்டு திருமணமும் செய்துவைத்தார். மகனைப் படிக்க வைப்பதற்காகத் தன்னிடம் இருந்த பணம் முழுவதையும் செலவு செய்துள்ளார். ஆனாலும் தன் மகன் தனக்குப் பேரக்குழந்தை பெற்றுக்கொடுக்கவில்லை என்று ஆதங்கப்பட்டுள்ளார். இது குறித்து பிரசாத் கூறுகையில், ``என் அனைத்துப் பணத்தையும் செலவு செய்து மகனை அமெரிக்காவில் படிக்கவைத்தேன். கடன் வாங்கி வீடு கட்டினேன். இப்போது நாங்கள் பணக் கஷ்டத்தில் இருக்கிறோம்.

குழந்தை
குழந்தை

எங்கள் மகனுக்கு 2016-ம் ஆண்டு திருமணம் செய்துவைத்தோம். எங்களுக்குப் பேரக்குழந்தையைப் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. அது ஆணாக இருந்தாலும் சரி... பெண்ணாக இருந்தாலும் சரி... பேரக்குழந்தை வேண்டும். ஒரு வருடத்துக்குள் எங்களுக்குப் பேரக்குழந்தை பெற்றுக்கொடுக்கவில்லையெனில் என் மகனும் மருமகளும் எங்களுக்கு ரூ.5 கோடி கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரசாத்தும் அவரின் மனைவியும் சேர்ந்து உத்தரகாண்ட் கோர்ட்டில் தங்கள் மகன், மருமகள் மீது வழக்கும் தொடர்ந்துள்ளனர். இது தொடர்பாக பிரசாத்தின் வழக்கறிஞர் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், ``பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் மீது பணத்தை முதலீடு செய்து அவர்களை நன்றாகப் படிக்கவைத்து, நல்ல நிறுவனத்தில் வேலைக்குச் சேரத் தயார்படுத்துகின்றனர். பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் அடிப்படை நிதித்தேவையை கவனித்துக்கொள்வது அவசியம். எனவேதான் பெற்றோர் தங்களது மகனிடம் ரூ.5 கோடி பணம் கொடுக்க வேண்டும் அல்லது பேரக்குழந்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று கூறி வழக்கு தொடர்ந்துள்ளனர்” என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism