Published:Updated:

"இலவசக் கல்வி, மருத்துவம் வழங்குவது தவறா?" - மோடியின் ஃப்ரீபீஸ் கலாசாரப் பேச்சு குறித்து கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால்

``அரசுப் பள்ளிகளில் இலவசக் கல்வி வழங்குகிறேன் என்றால், நான் ஏதாவது தவறு செய்கிறேனா?... மாணவர்கள் இலவச மற்றும் தரமான கல்வியைப் பெற வேண்டாமா?" - அரவிந்த் கெஜ்ரிவால்

"இலவசக் கல்வி, மருத்துவம் வழங்குவது தவறா?" - மோடியின் ஃப்ரீபீஸ் கலாசாரப் பேச்சு குறித்து கெஜ்ரிவால்

``அரசுப் பள்ளிகளில் இலவசக் கல்வி வழங்குகிறேன் என்றால், நான் ஏதாவது தவறு செய்கிறேனா?... மாணவர்கள் இலவச மற்றும் தரமான கல்வியைப் பெற வேண்டாமா?" - அரவிந்த் கெஜ்ரிவால்

Published:Updated:
அரவிந்த் கெஜ்ரிவால்

உத்தரப்பிரதேசத்தில் அண்மையில் பேசிய பிரதமர், ``நம் நாட்டில் இப்போது ஒரு புதிய கலாசாரம் தலையெடுத்துள்ளது. தேர்தல் நேரத்தில் இலவச அறிவிப்புகளை அள்ளிவீசும் கலாசாரம் அது. அந்தக் கலாசாரம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது. இளைஞர்கள் இத்தகைய அறிவிப்புகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு பதிலடிகொடுக்கும் விதமாக செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ``டெல்லி அரசால் நடத்தப்படும் பள்ளிகளிலிருந்து 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு (ஐஐடி) தகுதி பெற்றுள்ளனர். மேலும் 400-க்கும் மேற்பட்டோர் மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு அல்லது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிகளின் மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேசுகிறார்கள்.

அரசுப் பள்ளிகளில் இலவசக் கல்வி வழங்குகிறேன் என்றால், நான் ஏதாவது தவறு செய்கிறேனா?... மாணவர்கள் இலவச மற்றும் தரமான கல்வியைப் பெற வேண்டாமா? இது தேசத்தைக் கட்டமைக்கும் பணி... மாநில அரசு, அரசு மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, `மொஹல்லா கிளினிக்குகளை' அமைத்துள்ளது. இலவசக் கல்வி, மருத்துவம் வழங்குவது தவறா?'' என்றார்.