Published:Updated:

பாஜக-வுக்குத் தாவிய 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள்... கோவா அரசியலில் பரபரப்பு!

பாஜக-வுக்குத் தாவிய 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ( ட்விட்டர் )

கோவாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் 8 பேர் இன்று பா.ஜ.க-வில் இணைந்தனர்.

பாஜக-வுக்குத் தாவிய 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள்... கோவா அரசியலில் பரபரப்பு!

கோவாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் 8 பேர் இன்று பா.ஜ.க-வில் இணைந்தனர்.

Published:Updated:
பாஜக-வுக்குத் தாவிய 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ( ட்விட்டர் )

கோவாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க அதிக இடங்களைப் பிடித்து ஆட்சி அமைத்தது. தற்போது கோவாவின் முதல்வராக பிரமோத் சாவந்த் இருந்து வருகிறார். இந்த மாநிலத்தில் காங்கிரஸுக்கு 11 எம்.எல்.ஏ-க்கள் இருந்தனர். இந்த நிலையில், கோவா காங்கிரஸில் நிலவிவரும் உட்கட்சிப்பூசல் காரணமாக அதிருப்தியிலிருக்கும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் பா.ஜ.க-வில் இணையப்போவதாக அரசியல் வட்டாரத்தில் அரசல் புரசலாகப் பேசப்பட்டு வந்தது. அதை மெய்ப்பிக்கும் விதமாக இன்று காலை காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் 8 பேர் சபாநாயகரையும், முதல்வர் பிரமோத் சாவத்தையும் சந்தித்தனர்.

கோவா காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்
கோவா காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்
ட்விட்டர்

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான திகம்பர் காமத் தலைமையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் மைக்கேல் லோபோ, டெலிலா லோபோ, ராஜேஷ் பால்தேசாய், கேதார் நாயக் சங்கல்ப் அமோன்கர், அலிகசோ செகவேரா, ருடாலப் பெர்னாண்டஸ் உள்ளிட்ட 8 பேர் காங்கிரஸிலிருந்து விலகி, பா.ஜ.க-வில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

பிரமோத் சாவந்த்
பிரமோத் சாவந்த்

இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அந்த மாநில முதல்வர் பிரமோத் சாவந்த், ``இன்று பா.ஜ.க-வில் இணைந்த 8 எம்.எல்.ஏ-க்களையும் நான் வரவேற்கிறேன். காங்கிரஸ் `பாரத் ஜோடோ யாத்ரா' தொடங்கியிருக்கிறது. ஆனால், கோவாவில் `காங்கிரஸிலிருந்து வெளியேறும் யாத்ரா' தொடங்கியிருக்கிறது என்று நினைக்கிறன். நாடெங்கிலும் உள்ள மக்கள் காங்கிரஸிலிருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்து வருகின்றனர்" எனத் தெரிவித்தார்.