Published:Updated:

`கடவுள் கிருஷ்ணர் தினமும் கனவில் வருகிறார்; சமாஜ்வாடி ஆட்சிதான் என்றார்!' - சொல்கிறார் அகிலேஷ் யாதவ்

அகிலேஷ் யாதவ்
News
அகிலேஷ் யாதவ்

``கடவுள் கிருஷ்ணர் அடிக்கடி எனது கனவில் வந்து உத்தரப்பிரதேசth தேர்தலில் சமாஜ்வாடி கட்சி வெற்றி பெறும்” என்று சொல்கிறார் என்று அந்தக் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் முழு வேகத்தில் நடந்துவருகின்றன. அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை இறுதிசெய்வதிலும், கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதிலும் தீவிரமாக இருக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி தினம் தினம் உத்தரப்பிரதேசத்தில் நலத்திட்ட உதவிகளைத் தொடங்கி வைப்பதில் தீவிரம் காட்டிவருகிறார்.

மோடி, யோகி ஆதித்யநாத்
மோடி, யோகி ஆதித்யநாத்
Twitter/@myogiadityanath

மற்றொரு புறம் பாஜக-வும், சமாஜ்வாடி கட்சியும் சமீபத்தில் கான்பூரில் பெர்ஃப்யூம் வியாரிகள் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டை தங்களுக்குச் சாதகமாக்க முயன்றுவருகின்றன. இந்நிலையில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அளித்த பேட்டியில், ``யோகி ஆதித்யநாத் தோல்வியடைந்துவிட்டார். அவரை யாராலும் காப்பாற்ற முடியாது. ஒவ்வொரு நாளும் கடவுள் கிருஷ்ணர் எனது கனவில் தோன்றி சமாஜ்வாடிக் கட்சி தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என்று சொல்கிறார்” என்று தெரிவித்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சமீபத்தில் பாஜக எம்.பி.ஹர்நாத் சிங், கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு எழுதிய கடிதத்தில், ``முதல்வர் யோகி ஆதித்யநாத்தை வரும் சட்டமன்ற தேர்தலில் மதுரா தொகுதியில் போட்டியிட நிறுத்த வேண்டும். அத்தொகுதியில் நிறுத்தப்பட்டால் வெற்றிபெறுவார் என்று கடவுள் கிருஷ்ணர் எனது கனவில் வந்து சொன்னார்” எனக் அக்கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்

ஆனால் கட்சி தன்னை எந்தத் தொகுதியில் நிற்க சொன்னாலும் நிற்கத் தயாராக இருப்பதாக யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். பாஜக - சமாஜ்வாடி இடையே பெர்ஃப்யூம் வியாபாரி பியூஷ் ஜெயின், ராமர் கோயில் தொடர்பாக தொடர்ந்து வார்த்தைப் போர் நடந்துகொண்டிருக்கிறது. மற்றொரு புறம் அரசியல் கட்சிகள் தேர்தலில் வெற்றிபெறுவதற்காக ஏராளமான இலவசங்களையும் தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்துவருகின்றன.