Published:Updated:

குடும்பத் தலைவிக்கு ரூ.1000 - திமுக அரசை மறைமுகமாக விமர்சித்த தமிழிசை?! - திமுக ரியாக்‌ஷன் என்ன?

திட்ட துவக்க விழாவில் ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரியில் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், அத்திட்டத்தை முதல்வர் ரங்கசாமி, துணை நிலை ஆளுநர் தமிழிசை இணைந்து தொடங்கி வைத்தனர்.

குடும்பத் தலைவிக்கு ரூ.1000 - திமுக அரசை மறைமுகமாக விமர்சித்த தமிழிசை?! - திமுக ரியாக்‌ஷன் என்ன?

புதுச்சேரியில் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், அத்திட்டத்தை முதல்வர் ரங்கசாமி, துணை நிலை ஆளுநர் தமிழிசை இணைந்து தொடங்கி வைத்தனர்.

Published:Updated:
திட்ட துவக்க விழாவில் ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி

கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் சமயத்தில் தமிழ்நாட்டில் திமுக சார்பில்  முன்வைக்கப்பட்ட வாக்குறுதிகளில் முக்கியமானது, குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்பது. திமுக ஆட்சிக்கு வந்து சுமார் 20 மாதங்கள் ஆகும் நிலையில், இத்திட்டம் இன்னுமே தொடங்கப்படவில்லை. இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.விரைவில் இந்த மாதம் ரூ.1000 திட்டம் செயல்படுத்தப்படும் என்று திமுக அமைச்சர்கள் கூறி வருகின்றனர். 

முதல்வர் ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி
முதல்வர் ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில் இந்த திட்டத்தை முதல்வர் ரங்கசாமி, துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் இணைந்து புதுச்சேரியில் தொடங்கி வைத்தனர். அங்கு வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் குடும்பத் தலைவிகள், மற்ற உதவித்தொகை எதையும் பெறாமல் இருந்தால்... அவர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என கடந்தாண்டு நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.

இதற்கான கோப்புகள் தயார் செய்யப்பட்டு ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டது. ஆளுநர் தமிழிசை இம்மாத தொடக்கத்தில் இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருந்தார்.

இத்திட்டம் மூலம் புதுச்சேரியில் உள்ள 70 ஆயிரம் பெண்களுக்கு மாதம் தோறும் ரூபாய் 1,000 வழங்கப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 50 ஆயிரம் பேருக்கு வழங்கப்படுகிறது. இதனால் அரசுக்கு மாதம் ரூ.5 கோடி செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது. 

திட்டப் பயனாளிகளுக்கு ரூ.1000 வழங்கும் நிகழ்வில், ``குடும்ப தலைவிக்கு மாதாந்திர உதவித்தொகை திட்டத்தை பட்ஜெட்டில் குறிப்பிடாமல் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். இந்த அரசு அறிவிக்காததை செய்கிறது. சில அரசு அறிவித்தும் செய்யவில்லை. அதையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். " என துணை நிலை ஆளுநர் தமிழிசை கூறி இருப்பது  சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழன் பிரசன்னா
தமிழன் பிரசன்னா

தமிழிசையின் இந்தப் பேச்சு குறித்து திமுக-வின் மாநில செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னாவிடம்  பேசினோம், "மாநிலத்துக்கும்  மாவட்டத்துக்கும்  வித்தியாசம் தெரியாத ஆளுநர் தமிழிசை, இப்படிப் பேசலாமா?” என பேச்சைத் தொடங்கினார். ``புதுச்சேரி என்பது பரப்பளவின்படி பார்த்தால் ஒரு மாகாணம். அதை 8 கோடி மக்கள் தொகை கொண்ட  தமிழ்நாட்டுடன் ஒப்பிட முடியுமா?. தமிழ்நாட்டை சீரழித்து அதிக கடன் சுமையை ஏற்படுத்தியது பாஜக கூட்டணியில் இருந்த அதிமுகதான். திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 2 ஆண்டுகளுக்குள் 17-ம் இடத்தில் இருந்த தொழில்துறை 3-வது இடத்திற்கு  வந்துள்ளது. கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடங்கி உள்ள நிலையில், அதன் அடுத்த கட்டமாக, நிதி நிலைமை சீரானதும் மகளிர் உரிமைத்  தொகையும் வழங்கப்படும்” என்றார்.