Published:Updated:

``எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் சமாளிக்க தயார்..!" - முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

``எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள அரசும், சென்னை மாநகராட்சியும் தயார் நிலையில் இருக்கின்றன." - ஸ்டாலின்

``எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் சமாளிக்க தயார்..!" - முதல்வர் ஸ்டாலின்

``எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள அரசும், சென்னை மாநகராட்சியும் தயார் நிலையில் இருக்கின்றன." - ஸ்டாலின்

Published:Updated:
முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த மூன்று நாள்களாக மாநிலத்தின் பலவேறு இடங்களில் கனமழை பெய்துவருகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று நள்ளிரவு முதல் காலை வரை கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த நிலையில், சென்னை ஓட்டேரி, திரு.வி.க நகர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

ஓட்டேரியில் தேங்கியுள்ள மழை நீரை ராட்சத மின்மோட்டார் மூலமாக அகற்ற நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் அதிகாரிகளை அறிவுறுத்தினார். ஓட்டேரியிலுள்ள மக்களுக்கு கொசுவலைகளை நேரில் வழங்கினார். அதைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்தும் முதலமைச்சர் ஆலோசித்தார். வடசென்னை பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த பின்பு முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அப்போது, ``மழையை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன. அரசின் பணிகள் குறித்த எதிர்க்கட்சிகளின் விமர்சனம் இருக்கட்டும்... மக்கள் பாராட்டினால் போதும். எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள அரசும், சென்னை மாநகராட்சியும் தயார் நிலையில் இருக்கின்றன. அதீத கனமழையால் பாதிக்கப்பட்டிருக்கும் மயிலாடுதுறை, சீர்காழி, கடலூரில் நாளை நானே நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறேன்" எனத் தெரிவித்தார்.