Published:Updated:

பட்டினப்பிரவேச நிகழ்ச்சி தடை விவகாரம்: தருமபுர ஆதீன மடாலய முகப்பில் கிராம மக்கள் போராட்டம்!

போராட்டம்

தருமபுர ஆதீன ஸ்ரீமத் சுப்ரமணிய தம்பிரான், ``பக்தர்கள் அன்போடு சுமக்கும் செயலுக்கு சீர் பாதம் என்ற மற்றோரு பெயரும் உண்டு. இங்கு சிவனாக போற்றப்படும் குருமார்களை சாதாரணமான மனிதனோடு ஒப்பீடு செய்வது ஏற்க இயலாத ஒன்று" என்றார்.

பட்டினப்பிரவேச நிகழ்ச்சி தடை விவகாரம்: தருமபுர ஆதீன மடாலய முகப்பில் கிராம மக்கள் போராட்டம்!

தருமபுர ஆதீன ஸ்ரீமத் சுப்ரமணிய தம்பிரான், ``பக்தர்கள் அன்போடு சுமக்கும் செயலுக்கு சீர் பாதம் என்ற மற்றோரு பெயரும் உண்டு. இங்கு சிவனாக போற்றப்படும் குருமார்களை சாதாரணமான மனிதனோடு ஒப்பீடு செய்வது ஏற்க இயலாத ஒன்று" என்றார்.

Published:Updated:
போராட்டம்

தருமபுர ஆதீனத்தில் நடைபெறவுள்ள 'பட்டினப்பிரவேசம்' பல்லக்கு நிகழ்ச்சியை அரசு தடை செய்ததை கண்டித்தும், தடையை வாபஸ் பெறக்கோரியும்  தருமபுரம்  சுற்றுப்புற கிராம பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மயிலாடுதுறை மாவட்டம்  தருமபுரத்தில் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சைவ ஆதீன மடம் அமைந்துள்ளது. ஆதீனத்தில் ஆண்டுக்கு ஒருமுறை வைகாசி மாதத்தில் நடைபெறும் குரு பூஜையின் போது, ஆதீன மடாதிபதியை பல்லக்கில் அமர வைத்து நான்கு வீதிகளில் ஆதீன திருக்கூட்ட அடியவர்கள், சிஷ்யர்கள் சுமந்து சென்று அருளாசி வழங்கவைப்பது பல நூறு ஆண்டுகளாக பாரம்பரியமாக நடைபெற்று வரும்  வழக்கமாகும்.

தருமபுர ஆதீன பட்டினப்பிரவேசத்திற்கு அரசு தடை
தருமபுர ஆதீன பட்டினப்பிரவேசத்திற்கு அரசு தடை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் வருகின்ற  மே மாதம் 22 -ஆம் தேதி பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி ஆதீனத்தில் நடைபெறுவதை தடை செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு திராவிடர் கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை கோட்டாட்சியர்  பாலாஜி பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அரசியல் கட்சியினர் ஆன்மீக பேரவை அமைப்பினர் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுபற்றி தருமபுர ஆதீன  ஸ்ரீமத் சுப்ரமணிய தம்பிரான் பேசுகையில், ``திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ கண்டர் நந்தியம்பெருமானுக்கு உபதேசம் அளிக்க தைலதாரையாக வழிவந்தவை சைவ ஆதீனங்கள்.

இந்த உபதேச பரம்பரையில் கி.பி .15 நூற்றாண்டில் ஸ்ரீ குருஞானசம்பந்த முனிவரால் தருமை ஆதீனம் தோற்றுவிக்கப்பட்டது. ஸ்ரீ குருஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தொடங்கி இன்றுவரை 27  - வது குருமகாசந்நிதினாங்களால் இந்த தருமை ஆதீனம் சைவப்பணியும், சமுதாய பணியும் கிட்டத்தட்ட 450 ஆண்டுகளுக்கு மேலாக செம்மனே செய்து வருகின்றது. ஆதீனத்திற்கு சொந்தமான நிலங்கள், சொத்துகள் போன்றவை தர்மகாரியத்திற்கு மட்டுமே இன்றுவரை பயன்பட்டு வருங்கின்றது. சமய பணி, கல்வி பணி, திருக்கோயில் பராமரிப்பு, மக்கள் பணி, மருத்துவபணி, மற்றும் பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவியென ஆதீனத்தின் பணிகள் ஏராளம். இங்கு  வீற்றிருக்கும் குருமார்கள் சாதாரண மனிதர்கள் அல்ல. பட்டினி விரதம்,மௌன விரதம், தவம், உபதேசம், நடையரா பெரும் துறவு, கலாசார பண்பாட்டு பெருக்கம், தமிழ்ப்  பணி, சைவப் பணி, ஜீவ காருண்யம், ஜீவன் முக்தி, நன்கொடை, திருக்கோயில் பாதுகாப்பு, திருப்பணி சேவை, பேரிடர் உதவி என அரசிற்குகூட பல்வேறு வகைகளில் பல்வேறு உதவிகள் புரிந்துள்ளது. இப்படி துறவரம் பூண்டு, சமுதாயத்தை சீற்படுத்தி, மக்களை நல்வழி செலுத்தும் ஆதீன குருமார்கள் எண்ணற்ற மக்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்து கொண்டிருப்பவர்கள்.

இவர்களின் வாழ்க்கை அர்ப்பணிக்கப்பட்டது. இப்படியெல்லாம் ஒரு நாள்கூட வாழ இயலாது. அப்படித் தன்னை வருத்தி, ஊன் பெருக்காமல், உள்ளத்தை இறை சேவைக்கே நாளும் அர்ப்பணிக்கும் ஓர் ஒப்பற்ற குருமார்களை சாதாரணமான மனிதர்களுடன் ஒப்பிட்டு பார்ப்பது  பெரிய தவறு. மடத்தினால் பலன் பெற்றவர்கள், அருள் பெற்றவர்கள் குருபூசை தினத்தில் இங்கு வந்து வழிபாடு செய்து நடக்கும் அத்துணை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இரவு குருமணிகளை ஊர்வலமாக சிவிகையில் தாங்கி செல்வது வழக்கம். இது 5  -வது குருமணிகள் ஆட்சி காலம்  முதல்  மக்கள்  விருப்பதின் பேரில் இன்றுவரை நடைபெற்று வருகின்றது. இதனை தடை செய்வது என்பது மடத்தை தோற்றிவித்த முதல் குருமணிகளை அவமதிப்பதற்கு சமமாகும்.

பக்தர்கள் அன்போடு சுமக்கும் செயலுக்கு சீர் பாதம் என்ற மற்றோரு பெயரும் உண்டு. இங்கு சிவனாக போற்றப்படும் குருமார்களை சாதாரணமான மனிதனோடு ஒப்பீடு செய்வது ஏற்க இயலாத ஒன்று" என்றார்.

ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்

இந்நிலையில் தருமபுரம் ஆதீன மடத்தைச்  சுற்றியுள்ள மூங்கில்தோட்டம், முளைப்பாக்க்கம், கீழநாஞ்சில்நாடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த  மக்கள், ``ஆதீனகர்த்தரின் பாரம்பரிய நிகழ்ச்சியை தடை செய்யக்கூடாது” என்றும், தடை உத்தரவை வாபஸ் பெற வலியுறுத்தியும், தருமபுர ஆதீன மடாலய முகப்பில்  கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்து மதம்  சார்ந்த சம்பிரதாயங்களில் அரசு தலையிடக் கூடாது என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism