Published:Updated:

``முன்னேற்றக் கழகத்துக்காரன்' என்று ஈ.வெ.ரா குறிப்பிட்டது யாரை என்று ஆ.ராசா விளக்குவாரா?” - அண்ணாமலை

கோவை பா.ஜ.க கண்டனக் கூட்டம்

``ஆட்சியாளர்களுக்கு சாமரம் வீசுவது மட்டுமே தங்கள் பணி என்று காவல்துறை நினைத்திருந்தால், அந்த எண்ணத்தையும் அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்." - அண்ணாமலை

``முன்னேற்றக் கழகத்துக்காரன்' என்று ஈ.வெ.ரா குறிப்பிட்டது யாரை என்று ஆ.ராசா விளக்குவாரா?” - அண்ணாமலை

``ஆட்சியாளர்களுக்கு சாமரம் வீசுவது மட்டுமே தங்கள் பணி என்று காவல்துறை நினைத்திருந்தால், அந்த எண்ணத்தையும் அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்." - அண்ணாமலை

Published:Updated:
கோவை பா.ஜ.க கண்டனக் கூட்டம்

கோவையில் ஆளும் தி.மு.க அரசைக் கண்டித்து பா.ஜ.க கண்டன ஆர்பாட்டம் நடத்தியது. அதில் அண்ணாமலை கலந்துகொண்டார். அதைத் தொடர்ந்தும் கோவைக் கூட்டம் குறித்து தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், ``தி.மு.க-வின் தொடர் தோல்விகளால் நம்பிக்கை இழந்த மக்கள், தாங்களாகத் திரண்டு வந்து பாஜக-வுக்கு ஆதரவைத் தெரிவித்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம். தன்னுடைய கருத்தை, ஜனநாயகரீதியில், பேச்சுரிமைக்கு உட்பட்டு, முகத்தில் அடித்தாற்போல, உண்மைகளைப் பேசிய மாவட்டத் தலைவரின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இத்தனை பெரிய கூட்டம் இதற்கு முன் கூடியதில்லை. பெருகிவந்த மக்கள் பெருக்கம், இந்தக் கோட்டம் பா.ஜ.க-வின் கோட்டை என்று நிரூபிப்பதாக இருந்தது.

தி.மு.க-வின் தவறுகளை, ஊழல்களை, அத்துமீறல்களை, திறமையின்மையை பா.ஜ.க-வினர், சுட்டிக்காட்டிப் பேசும்போது, அந்தச் சொல்லின் உள்ளிருக்கும் சூடான உண்மையை, சத்தியத்தைப் பொறுக்க முடியாமல், பொய் வழக்கு போட்டு, தேசவாதிகளைக் தமிழக அரசு கைதுசெய்கிறது. 'தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை' (மரண சாசனம்) என்ற ஒரு புத்தகத்திலிருந்து இந்துக்கள் குறித்து பெரியார் சொன்னதைத்தான் நான் படித்தேன் என்று ஆ.ராஜா அந்தப் புத்தகத்திலிருந்து படித்துச் சொன்னதை நாம் பார்த்தோம்.

கோவை பா.ஜ.க கண்டனக் கூட்டம்
கோவை பா.ஜ.க கண்டனக் கூட்டம்

ஆனால், அதே உரையில், அதே புத்தகத்தில், 21-ம் பக்கத்தில், அதே பெரியார் சொல்கிறார்….."நாதி இல்லையே, சொல்றதுக்கு, சிந்திக்க நாதி இல்லையே! ஒரு ஓட்டுக்கு என்னென்னெ கொடுக்கிறான்? பொண்டாட்டியைத் தவிர மற்றதையெல்லாம் கொடுக்கிறானே... இதற்குக் கவலையேபடமாட்டேங்கிறானே முன்னேற்றக் கழகத்துக்காரன், மற்றவனெல்லாம் என்னை வைவான். இவனுக்கு ஏன் இதுவெல்லாம்... என்ன கேடு, இந்த வேலையை ஏன் பண்ணிக்கிட்டு இருக்கிறான் என்று. அவனுக்கு ஓட்டுதான் பெருசு. அவன் பொண்டாட்டி , பிள்ளையைப் பற்றி அவனுக்குக் கவலை இல்லை. இன்னும் கொஞ்ச நாள் போனால் பொண்டாட்டியைக்கூட கொடுத்து ஓட்டு வாங்குகிறாற்போல் வழக்கத்தில் வந்துவிடும்.

ஏனென்றால் அந்தப் பதவியும் அவ்வளவு உயர்வாய்ப் போச்சு" என்று குறிப்பிட்டுள்ளதை ஆ.ராசா சொல்ல மறந்தது ஏன்... அதிலும் 'முன்னேற்றக் கழகத்துக்காரன்' என்று ஈ.வெ.ரா அவர்கள் குறிப்பிட்டது யாரை என்று ஆ.ராசா விளக்குவாரா... ஆ.ராசாவின் நடையில் நாம் சொல்ல வேண்டுமென்றால், இதை நான் சொல்லவில்லை, பெரியார்தான் சொன்னார்! சாதி, மத, இன, வர்க்கரீதியாக மக்களைப் பிரித்து அதன் மூலம் குளிர்காயும், இழிவான ஓட்டு அரசியலை தி.மு.க தொடர்ந்து நடத்திக்கொண்டுவருகிறது.

கோவை பா.ஜ.க கண்டன கூட்டம்
கோவை பா.ஜ.க கண்டன கூட்டம்

ஆளுங்கட்சியின் அராஜகத்தைக் கண்டித்து, காவல்துறையின் கடமை மீறலைக் கண்டித்து, ஆ.ராசாவின் ஆபாசப் பேச்சைக் கண்டித்து, பேச்சுரிமை மறுக்கப்படும் பேதமையைக் கண்டித்து, பா.ஜ.க-வினரை துணை அமைப்பினரை கைதுசெய்ததைக் கண்டித்து, ஒட்டுமொத்த தமிழினமே ஒன்றாகத் திரண்டு வந்ததுபோல உணர்ச்சிமயமான ஆர்ப்பாட்டம். ஆளுங்கட்சியின் அடக்குமுறையையும், ஏவல் துறையாக மாறியிருக்கும் காவல்துறையின் அத்துமீறல்களையும் கண்டு எந்த பா.ஜ.க தொண்டனும் அஞ்சப்போவதில்லை.

ஆட்சியாளர்கள் ஒன்றும் கடவுள்கள் இல்லை. தன்னைக் கண்டிக்கவும் தண்டிக்கவும் யாரும் இல்லை என்ற எண்ணம் ஆட்சியாளர்களுக்கு வரும்போது, அந்த மாநிலத்தில் இது போன்ற அவலங்கள்தான் அரங்கேறும். அதேபோல ஆட்சியாளர்களுக்கு சாமரம் வீசுவது மட்டுமே தங்கள் பணி என்று காவல்துறை நினைத்திருந்தால், அந்த எண்ணத்தையும் அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்.

கோவை பா.ஜ.க கண்டன கூட்டம்
கோவை பா.ஜ.க கண்டன கூட்டம்

மத்திய அரசு உங்களை கவனித்துக்கொண்டிருக்கிறது. நீங்கள் எத்தனை நேர்மையாக இருக்கிறீர்கள் என்று கண்காணிக்கப்படுகிறீர்கள். தமிழகத்தில் ஆட்சி மாற்றங்கள் நடைபெறத்தான் போகின்றன. அப்போது நடுநிலை தவறிய, நேர்மை இல்லாத காவல்துறையினருக்கு நெஞ்சம் பதைக்கப்போகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்களின் எதிர்ப்பை தமிழக முதல்வர் கவனித்திருப்பார். இனியேனும், தன் தவறுகளை திருத்திக்கொள்வார், நடுநிலையாக, நேர்மையாக, அரசை நடத்துவார் என்று நம்புகிறோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.