Published:Updated:

ஒரே ஆண்டில் இரண்டு முதல்வர்கள்... குமாரசாமி கவிழ்ந்தது எப்படி?

ஜெ.பிரகாஷ்

"எனது தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க சதி நடக்கிறது. எத்தனை காலம் நான் முதல்வராக இருப்பேன் என எனக்குத் தெரியாது."

கர்நாடக சட்டசபை
கர்நாடக சட்டசபை

கர்நாடகத்தில் கடந்த 2018, மே 12-ம் தேதி நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் பி.ஜே.பி, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என மும்முனைப் போட்டி நிலவியது.

எடியூரப்பா, குமாரசாமி, சித்தராமையா
எடியூரப்பா, குமாரசாமி, சித்தராமையா

பி.ஜே.பி பெரும்பான்மையான இடங்களில் வென்றபோதும், ஆட்சியமைப்பதற்குப் போதுமான எம்.எல்.ஏ-க்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து, கர்நாடக மாநிலத்தில் ம.ஜ.த தலைமையில் ஆட்சியமைக்க காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்தது.

ராகுல், குமாரசாமி, சோனியா காந்தி
ராகுல், குமாரசாமி, சோனியா காந்தி

ஆனால் பி.ஜே.பி அதிக இடங்களைக் கைப்பற்றியதன் அடிப்படையில் ஆட்சியமைப்பதற்கு பி.ஜே.பி-க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எடியூரப்பா முதல்வராகத் தேர்வுசெய்யப்பட்டார். பெரும்பான்மை இல்லாத நிலையில் எடியூரப்பா முதல்வராகப் பதவியேற்றதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தன.

எடியூரப்பா
எடியூரப்பா

எடியூரப்பா, பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு, கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா 15 நாள் அவகாசம் வழங்கியிருந்தார். ஆனால், உச்ச நீதிமன்றம் உடனடியாக வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால், எடியூரப்பாவால் உடனடியாகப் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. இதனால், அவர் மூன்றே நாள்களில் தன் பதவியை ராஜினாமா செய்தார்.

எடியூரப்பா
எடியூரப்பா

ராஜினாமாவுக்கு முன் உரை நிகழ்த்திய எடியூரப்பா, "தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்றதால் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். மக்களின் தீர்ப்புக்கெதிராக காங்கிரஸும் ம.ஜ.த-வும் ஒன்றுசேர்ந்துள்ளன. சுயநலத்துக்காக ஒன்றுகூடி ஆட்சியமைக்கின்றனர்" என்று குற்றம்சாட்டினார்.

எடியூரப்பா
எடியூரப்பா

எடியூரப்பா ராஜினாமாவுக்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், "இதன்மூலம் சட்டம், ஜனநாயகத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது. கர்நாடக அரசியல் விவகாரத்தை நீதித்துறை சிறப்பாகக் கையாண்டது" என்றார்.

குலாம் நபி ஆசாத்
குலாம் நபி ஆசாத்

எடியூரப்பா ராஜினாமா செய்ததையடுத்து, குமாரசாமி முதல்வராகப் பதவியேற்றார். இவ்விழாவில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மாயாவதி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

குமாரசாமி பதவியேற்பு விழா
குமாரசாமி பதவியேற்பு விழா

குமாரசாமி பதவியேற்றாலும், அவருடைய ஆட்சிக்கு அடிக்கடி சோதனை ஏற்பட்டுக் கொண்டேயிருந்தது. "எனது தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க சதி நடக்கிறது. எத்தனை காலம் நான் முதல்வராக இருப்பேன் என எனக்குத் தெரியாது" என அவ்வப்போது சொல்லிக் கொண்டே இருந்தார் குமாரசாமி.

குமாரசாமி
குமாரசாமி

குமாரசாமியின் ஆட்சி ஓராண்டைக் கடந்த நிலையில், ம.ஜ.த - காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் 16 பேர் ராஜினாமா செய்தனர். ஆள் கடத்தல், துரத்தல் என பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறின. இறுதியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எதிர்பார்த்ததைப் போலவே அவருடைய அரசு பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியதால் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது.

குமாரசாமி
குமாரசாமி