Published:Updated:

சென்னை: `அரும்பாக்கத்தில் குடிசைப் பகுதிகளில் உள்ள வீடுகளை அரசு அதிகாரிகள் அகற்றினர்'

குடிசை பகுதி
குடிசை பகுதி

சென்னை அரும்பாக்கத்தில் குடிசைப் பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை அரசு அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் கூவம் ஆற்றை ஒட்டி சுமார் 250 வீடுகள் உள்ளன. இந்த குடிசை பகுதியில் வசிக்கும் மக்களில் புளியந்தோப்பு குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் 93 பேருக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. வீடுகளை காலிசெய்ய சொல்லி மாநகராட்சி சார்பில் முறையாக நோட்டீசும் வழங்கப்பட்டிருந்தது. நேற்று வீடுகளை இடிப்பதற்காக அதிகாரிகள் அந்த பகுதிக்குச் சென்றனர். வீடுகள் ஒதுக்கப்பட்ட நபர்களுக்கு அதற்கான ஆணை வழங்கப்பட்டது. அவர்கள் பொருட்களைப் புளியந்தோப்பு பகுதிக்குக் கொண்டு செல்ல மாநகராட்சி சார்பில் வாகனமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இடிக்கப்படும் வீடுகள்.
இடிக்கப்படும் வீடுகள்.

250 குடும்பங்கள் வசிக்கும் பகுதியில் வெறும் 93 குடும்பங்களுக்கு மட்டுமே வீடுகள் ஒதுக்கப்பட்டிருந்தது. மீதமுள்ளவர்கள் அவர்களின் வீடுகளை காலிசெய்ய முடியாது என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையின் உதவியோடு அதிகாரிகள் கட்டுப்படுத்தினர். வீடுகளை காலிசெய்வதற்கு ஏதுவாக அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப் பட்டிருந்தது. வீடு ஒதுக்கப்பட்டவர்கள் மற்றும் ஒதுக்கப்படாதவர்கள் அனைவருமே வீடுகளை உடனடியாக காலிசெய்ய அறிவுறுத்தப்பட்டனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு