Published:Updated:

ஆன்லைன் ரம்மி: ``அரசு முடிவை முதல்ல கேளுங்க; நான் நடிக்கிறதை ரெண்டாவதா கேளுங்க” - சரத்குமார் காட்டம்

சரத்குமார்

``அரசு முடிவெடுத்து இது தடைசெய்யப்பட்ட ஒண்ணுன்னு சொன்னா, தடைசெய்யப்பட்டதை எப்படி நான் பயன்படுத்துவேன்... தடை செஞ்ச ஒண்ணை நான் எப்படி விளம்பரப்படுத்துவேன். சரத்குமார்தான் எல்லாரையும் கெடுக்குறாருன்னு எப்படிச் சொல்வீங்க?”

ஆன்லைன் ரம்மி: ``அரசு முடிவை முதல்ல கேளுங்க; நான் நடிக்கிறதை ரெண்டாவதா கேளுங்க” - சரத்குமார் காட்டம்

``அரசு முடிவெடுத்து இது தடைசெய்யப்பட்ட ஒண்ணுன்னு சொன்னா, தடைசெய்யப்பட்டதை எப்படி நான் பயன்படுத்துவேன்... தடை செஞ்ச ஒண்ணை நான் எப்படி விளம்பரப்படுத்துவேன். சரத்குமார்தான் எல்லாரையும் கெடுக்குறாருன்னு எப்படிச் சொல்வீங்க?”

Published:Updated:
சரத்குமார்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நேற்று (செப்டம்பர் 4) நடைபெற்றது. சமத்துவ மக்கள் கட்சி 16-ம் ஆண்டில் அடியெடுத்துவைத்திருக்கும் சூழலில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார், கட்சியின் செயல்பாடு, தேர்தல்களை எதிர்கொள்வது சம்பந்தமாக நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

சரத்குமார்
சரத்குமார்

ஆலோசனை கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சரத்குமார், ``மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்கிற அடிப்படையில்தான் ஓர் இயக்கம் தொடங்கப்படுது. ஆனால், தேர்தல்ல நில்லுங்கன்னு சொன்னா, பலரும் தயங்குகிற ஒரு சூழல்தான் இன்னைக்கு இருந்துக்கிட்டு இருக்கு. ஏன்னா எல்லாரும் பெரிய அளவுல பணம் செலவழிக்கிறாங்க, அப்படியிருக்க நாம எப்படி ஈடுகொடுத்துப் போட்டி போட முடியும்... ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 30 கோடி ரூபாய் செலவு செய்யணும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு 100 கோடி செலவு செய்யணும்னு சொன்னா, மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிற ஒரு சாதாரணக் குடிமகனால் நிச்சயமாகத் தேர்தலில் நிற்க முடியாது.

என்னால்கூட தேர்தலில் நிற்க முடியாது. என்கிட்டயும் பணம் கிடையாது. வசதி படைத்தவர்கள் மட்டும்தான் தேர்தலிலே போட்டியிட முடியும் என்ற சூழல் வந்தால், அது உண்மையான ஜனநாயகமாக இருக்காது. 2024 தேர்தலுக்கு ஆயத்தப் பணிகளை தொடங்க வேண்டுமென ஆலோசனைக் கூட்டத்தில் பேசியிருக்கிறேன். ஒவ்வொரு தடவையும் தனியாதான் நிக்கணும்னு முடிவெடுக்கும்போதுகூட, ‘தனியா நின்னா சரியா இருக்காது தலைவரே’ன்னு சில அறிவுரைகள் வரும்போது என்ன தான் செய்யுறது... எங்க நிர்வாகிகள் 40 தொகுதியிலயும் நிக்குறேன்னு சொன்னா, பிரசாரம் செய்ய நான் தயாராக இருக்கேன்” என்றார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தொடர்ந்து பேசியவரிடம் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்ப, ``ஆன்லைன் ரம்மியைத் தடைசெய்யுறதுக்கு அரசு என்ன முடிவெடுக்குதுன்னு முதல்ல கேளுங்க. சரத்குமார் நடிக்கிறதை ரெண்டாவதா கேளுங்க. அரசு முடிவெடுத்து இது தடைசெய்யப்பட்ட ஒண்ணுனு சொன்னா, தடைசெய்யப்பட்டதை எப்படி நான் பயன்படுத்துவேன்... தடை செஞ்ச ஒண்ணை நான் எப்படி விளம்பரப்படுத்துவேன். சரத்குமார்தான் எல்லாரையும் கெடுக்குறாருன்னு எப்படிச் சொல்லுவீங்க. நான் சொல்ற ரம்மி மட்டும் இல்லைங்க. எவ்வளவோ ரம்மி ஆட்டம் இருக்கு. கிரிக்கெட்ல டிரீம் லெவன்ல தோனி, கோலி எல்லாம் வர்றாங்க. அது சூதாட்டம்தானே... ‘குடிப்பழக்கம் குடியைக் கெடுக்கும்’னு சொல்றாங்க. குடிக்காம இருக்காங்களா... ‘புகைபிடித்தல் உடல்நலத்துக்கு கேடு’ன்னு சொல்றாங்க. புகையிலைத் தயாரிப்பை ஏன் நாட்டுல நிறுத்த மாட்டேங்குறீங்க..?

ஆபாசப் படங்களை ஏன் தடை செய்ய மாட்டேங்குறீங்க... உலகத்துல நல்லதும் இருக்கு, கெட்டதும் இருக்கு. நாம தான் சுய கட்டுப்பாட்டோடும் மனப்பக்குவத்தோடும் இருக்கணும். நான் அந்த விளம்பரத்துல நடிச்சதுக்காக சப்பைக்கட்டு கட்டலை. சரத்குமார் நடிக்கிறதால மட்டும் நீங்க கெட்டுப் போகலை. நீங்களா அதுக்குத் தயாராகிட்டீங்க...

சரத்குமார்
சரத்குமார்

தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் முன்னணிக் கட்சிகளாக இருக்கின்றன. அப்படியிருக்க அ.தி.மு.க-வில் இப்போது அடித்துக்கொள்வதைப் பார்க்கும்போது அது யாருக்கு நல்லதெனத் தெரியவில்லை. எனக்கு ஜாதகம் பார்க்கத் தெரியாது. அதனால அ.தி.மு.க-வோட எதிர்காலம் எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியாது. ஒற்றுமையே இல்லாதபோது எதிர்காலம் எப்படியிருக்கும்?” என்றார்.