Published:Updated:

மகாராஷ்டிரா: அரசியல் நெருக்கடிக்கு தீர்வு? - ஆளுநர் கோஷாரியா கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ்!

பகத்சிங்

மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷாரியா கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

மகாராஷ்டிரா: அரசியல் நெருக்கடிக்கு தீர்வு? - ஆளுநர் கோஷாரியா கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ்!

மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷாரியா கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

Published:Updated:
பகத்சிங்

மகாராஷ்டிராவில் கடந்த 20-ம் தேதி சட்டமேலவைத் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலைத் தொடர்ந்து அதிருப்தி சிவசேனா எம்.எல்.ஏ-க்களை அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே குஜராத் மாநிலம் சூரத்திற்கு இரவோடு இரவாக அழைத்துச் சென்றார். அவர்கள் அனைவரும் தற்போது அஸ்ஸாமில் தங்கியிருக்கின்றன்ர. அடுத்த நாளே, அதாவது 21-ம் தேதி மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷாரியா, முதல்வர் உத்தவ் தாக்கரே ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. பகத்சிங் கோஷாரியா சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இதனால் அதிருப்தி சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரை நேரில் சந்தித்து எந்த விதமான மனுக்களையும் கொடுக்காமல் இருந்தனர். இந்நிலையில் இன்று காலையில் கோஷாரியா சிகிச்சை முடிந்து ராஜ்பவன் திரும்பியிருக்கிறார்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

இதனால் மகாராஷ்டிராவில் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றோ அல்லது நாளையோ அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் தரப்பில் ஆளுநரைச் சந்திப்பார்கள் என்று தெரிகிறது. துணை சபாநாயகர் ஏன் பதவியை பறிக்கக்கூடாது என கேட்டு விளக்கம் அளிக்கும்படி கூறி 16 சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். அவர்கள் நாளை மாலைக்குள் இதற்குப் பதிலளிக்கவேண்டும். எனவே நாளை அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் துணை சபாநாயகரைச் சந்திக்க வரும்போது ஆளுநரை சந்திக்க வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிகிச்சை முடிந்து வரும் ஆளுநர்
சிகிச்சை முடிந்து வரும் ஆளுநர்

இதனால் இன்று அஸ்ஸாமில் தங்கியிருக்கும் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தைக் கூட்டி இது குறித்து முக்கிய ஆலோசனை நடத்த ஏக்நாத் ஷிண்டே திட்டமிட்டிருக்கிறார். நேற்று இரவு குஜராத் சென்று பா.ஜ.க தலைவர்களைச் சந்தித்துப் பேசியது குறித்தும், இன்று எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் ஏக்நாத் ஷிண்டே விவாதிக்க திட்டமிட்டிருக்கிறார். பா.ஜ.க தலைவர்களை ஷிண்டே சந்தித்த அடுத்த நாளே ஆளுநர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருப்பது அடுத்தகட்ட அரசியல் பணிகளை பா.ஜ.க தொடங்கிவிட்டதாகவே தெரிவிகிறது. இதற்கிடையே அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் துணிவு இருந்தால் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் நின்று வெற்றி பெறவேண்டும் என்று உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே சவால் விட்டுள்ளார்.